ஆஞ்ஜநேயர் பாழாக்கும் பால்..?

Category :

அதிர்ச்சி அடைய வேண்டாம் மக்களே...உண்மை.

ஒவ்வொரு மாதமும் புதுவை அருகில் உள்ள "பஞ்சவடி"ஆஞ்ஜநேயருக்கு 1000லிட்டர் பால் ஊற்றி அபிசேகம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருளை பாழக்குகின்றனர் இதன் நிர்வாகிக‌ள்.

இவர்களை பக்தர்கள் என்பதை விட அயோக்கியர்கள் என்றுதான் கூற வேண்டும்.ஊரில் எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு பரிதாபத்தில் தவிக்கும் போது....இவர்களின் செயலை வேறு எப்படி கூறுவது.
ஒரு லிட்டர் பால் 12ரூபாய்....ஆக ரூ.12,000/= பாலை அத்தியாவசிய பொருளை வீணாக்குவது குற்றம் தானே...

ரசிகர்கள் தான் தங்கள் கட்‍ அவுட் கதாநாயகனுக்கு பால்ஊற்றி அசிங்கம் செய்வதை பார்த்திறுக்கிறோம்.ஆனால் இந்த செயலை என்னவென்று சொல்வது....

ஒருசில தினசரிகள் இந்த பால் படத்தையும் பத்திரிகையில் போட்டு பக்தர்களை பாழாக்கி கொண்டுள்ளன.
கடைசி வெறி:
இதில் என்ன கூத்து என்றால், இந்த அபிசேகம் உலக‌ நன்மைக்காக நடத்தப் படுகிறதாம்.
Thanks: Dinamalar Photo

தேவலோகத்தில் சிம்புதேவன்!

Category :

ஆமாங்க....நம்ம இயக்குநர் சிம்புதேவனை தேவலோக
கடவுள்கள் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்களாம்.
ஒவர் பாராட்டு மழையில் குடையே புடிக்க வேண்டியதாப்
போச்சாம்.அவர்கள் எடுக்கும் படத்துக்கு "கால்சீட்'' கேட்டு நச்
அரிப்பு வேறாம்.

இதுல ஒரு தமாசு பாருங்க, எமலோகத்து கடவுள்கள் நம்ம
சிம்பு தேவனுக்கு ''டின்னு'' கட்டிட்டாங்களாம்.ஏன் திருட்டு 'விசிடி' ய எங்களுக்கு அனுப்பலன்னு....கடவுள்களின் தொல்ல தாங்காம ஒடினவர், திடுக்கிட்டு (?) அங்க இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவ்ளோதான் சர,சரன்னு பறந்தவர்....கூவத்துல வந்து தொப்புன்னு....நல்ல வேலை சிம்புதேவனுக்கு ஒன்னும் ஆகலை,விழுந்தது குளிச்சிட்டிருந்த ரெண்டு
பன்றி-யின் மேல என்பதால் அந்த பன்னிகள் எமலோகம் போவ வேண்டியதாப் போச்சு.

இப்ப நம்ம உலகத்துக்கு வருவோம்...."அறை எண் 305-ல் கடவுள்" என்ற நகைச்சுவை படத்துக்கு சிம்பு தேவனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.இரண்டரை மணி நேரம் நம்மை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த பிரகாஷ்ராஜ்,சந்தானம்,என அனைத்து நடிகர்களுமே அசத்தியிருக்கின்றனர்.

படத்தின் சின்ன செய்தி:
''உழைத்தால் உயரலாம்"

முக்கிய செய்தி:
IT மக்களா....படம் பாக்கப் போகும் போது கைய பாக்கட்டுல வச்சுகோங்க(உங்க பாக்கட்டுல மட்டும்)....நெறய பேருக்கு விரல் காணாம போயிடிச்சாம்.

சிம்புதேவன் திடுக்கிட்டு விழக் காரணம்:
தேவலோகத்துலயும் நம்ம மலயாளிகள் ''சாயாக் கடை''யும்''சாராயக்கடை''யும் வைத்திருந்ததைப் பார்த்து.?

காந்தி சாலை,நேரு வீதி,ராஜிவ் பாலம்..விற்பனைக்கு?

Category :

சட்டசபையில் ஒரு காங்கிரசு உறுப்பினர் கத்திபாரா பாலத்திற்கு நேரு
பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த நாட்டின் சாலைகளுக்கும், பாலங்களுக்கும், கல்லூரிகளுக்கும்,ஆய்வு கூடங்களுக்கும் இந்த பெயர்களை விட்டால் வேறு கிடையாதா?....இந்த நாட்டிற்கு வேறு யாரும் தியாகமே செய்யவில்லையா?...

காங்கிரஸ்காரர்களே இந்த பெயர்களைச் சொல்லி இத்தனை ஆண்டு வியாபாரம் செய்தது போதாதா?தமிழ்நாட்டு பாலத்திற்கு ஒரு தமிழனின் பெயர் வைக்க நமக்கு அருகதை கிடையாதா? அப்படி ஒரு தமிழனும்
தரம் உள்ளவன் இல்லை என்றால் அந்த பாலம் கட்ட வியர்வை விட்ட நம் சகோதரன்"உத்திர பிரசேதம் அல்லது பீகார்" தொழிலாளி பெயர் வைத்தால் கூட பெரு மகிழ்ச்சி அடையலாம்.

அதுவும் நம்ம வூரு காங்கிரஸ்காரர்களுக்கு ரொம்ப பாசம்....இந்த பெயர்களின் மேல்....என்ன செய்ய வாழனுமுள்ள? இன்னும் கொஞ்ஜம் நாள் போனா "ராகுல் பாலம்" வேனும்னு கேட்டாலும்,கேப்பாங்க.....

கிரிக்கெட் 20/20-ம்,அலங்கோல ஆட்டமும்!!!

Category :

விசயத்துக்கு வருவோம்.

நம்ம ஜனங்க ஏன் இப்படி வச்ச கண்ணு மாறாம IPL 20/20 பார்க்குறாங்கன்னு கீழ பாருங்க புரியும்.


முன்னாடி தான் நம்ம திரைப்படங்களில் ஒரு காட்சியாவது புடவையை அவிழ்த்து காட்டுவார்கள்.(அதாங்க கற்பழிப்பு)அதையெல்லாம் பார்த்து சலிச்சு போன நம்ம சனங்களுக்கு கிரிக்கெட்டு நடத்தறவனே ஒரு ''ரெக்கார்டு டான்ஸ்'' கூட்டத்தையும் ஆட வச்சி வெளயாட்ட காட்டறான்.

கிரிகெட்டு ஆட்டம் மப்பா இருந்தாலும் இவங்க ஆட்டத்தால டி.ஆர்.பி (TRP)ரேட்டிங் ஏறுதாமா???

ஏறாதா பின்ன????

ஹேப்பி பொங்கல்!

Category :

ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.

முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.

மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தின‌ங்க‌ள் க‌ழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக‌ நடந்தேறின‌‌.பெண்ணையாற்றின் க‌ரையில் வெளியூர், உள்ளூர் சாமிக‌ளின் தீர்த்த‌வாரி‍யும் ந‌டைபெற்ற‌ன‌.

க‌டைசி வெறி:

இப்போதெல்லாம் புதிய‌ தமிழ் திரைப‌ட‌ங்க‌ளின் இடைவேளை ஆங்கில‌த்தில் தான் INTERMISSION செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.த‌மிழ‌ர்க‌ளூக்கு இடைவேளை புடிக்காதோ என‌த் தெரிய‌வில்லை?.

ஆங்கில புத்தாண்டும்,நம் ஆடம்பர அலங்கோலமும்?

Category :

இன்று "நியு இயர்".NEW YEAR ஆரம்பம்!!...

ஆமாம்...ஜனவரி ஒன்று என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் தினம் தான்.ஆனால் தமிழன் ,ஆங்கில ஒன்னைக் கூட‌அசிங்கமாய் கொண்டாடக் கற்றுக் கொண்டு விட்டான்.

நேற்று இரவே 12 மணிக்கு வெடிச்சத்தத்துடன் நம்ம மாரியாத்தா கோயிலில் கூட புத்தாண்டை ஆரம்பித்தனர்.விடிந்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று ஆண்டவனுக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லி மகிழ்ந்தனர்.
இந்தமாதிரியான கேளிக்கை கூத்துகள் சில வருடங்களாகத்தான் வேர் விட்டுக் கொண்டுள்ளன.

எங்கள் பக்கத்து தண்ணீர் தேசத்தில்(புதுச்சேரி தான்!!!) இரவு முழுதும் நட்சத்திர ஹோட்டல்களில்(விடுதி)....ஆட்டமும்,பாட்டுமுமாக‌ அரங்கேறி உள்ளன.
த‌மிழனின் அடையாளங்கள்,ஆட்டம் கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.

தமிழினமும் விளம்பர யுகத்தில் மாட்டிக்கொண்டு விடியலைத்தொலைத்து கொண்டிருக்கிறதோ என ஐயமாக உள்ளது
.

சன் டி.வி‍‍‍‍‍-ன் நகல் டி.வி?

Category :

ஆமாம்! போன வாரத்திலிருந்து ஒளிபரப்பாகும்
கலைஞர் தொலைக்காட்சி,தமிழகத்தை கலக்கும் என எதிர்பார்த்தால்
அது சன்‍‍-ன் ஜெராக்ஸ் காப்பியாக பிற‌ந்துள்ளது.

அப்பட்டமான சினிமா மூலதனங்கள், அசிங்கமான
சீரியல்கள் (பெயர் நெடுந்தொடர்....தமிழாக்கி இருக்கிறார்கள்).
மற்றபடி இது ஒரு முழுமையான மற்றுமொரு மசாலா டிவி.
தமிழனுக்கு சோறு கிடைக்கிறதோ இல்லையோ,, வித,விதமான‌
வெட்டி சேனல்களுக்கு குறை இல்லாமல் கிடைக்கிறது.

தமிழகம் இந்த சேனல் புற்றுநோயிடமிருந்து மீள வழியே இல்லை
என்றே தோன்றுகிறது.