Showing posts with label கடலூர். Show all posts
Showing posts with label கடலூர். Show all posts

வடமலை ‍= தன்னம்பிக்கை நாயகன்

Category :

ஆம்.இன்று (16-03-2019) நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார், ஆனால் அவரின்
நினைவுகள் என்றென்றும் நம்மிள் உயிர் வாழும்.

உழைப்பின் இலக்கணம் அவர்...தேனீ போல் உழைப்பவர்,உழைத்தவர். ஆம், அவர் என்னுள்ளும் கிரியா ஊக்கியாய் ....இளையோருக்கு பாடமாய்....

அவர் அதிகாலையில் 4.00மணிக்கு தன் "சைக்கிள்" ல் வித்தியாசமான் மணியுடன் கூத்தப்பாக்கம் மெயின் ரோட்டில் அனைவரையும் எழுப்பிவிடுவார்...அந்த சைக்கிள் தேவனாம்பட்டினம் கடற்கரை சென்று திரும்பும். அப்போதே என்னுடன் பேசும்போது நம்பிக்கை விதைகளை விதைத்தவர் அவர்.

1980 களில் அவர் கடலூர் "செல்லமய்யர் துணிக்கடை"யின் நாயகன் அவர். முதலாளிக்கு எல்லாமாக இருந்தவர்...அவ்வளவு விசுவாசி.
வியாபாரத்தை வித்தியாசமாக செய்தவர். பின்னர் கால சுழற்சியால், துணி வியாபாரம் படுத்தவுடன், "பாண்டியன் டயர்ஸ்" ல் சேர்ந்து ஊர் , ஊராய் சுற்றினார்... டயர் ரீட்ரெட் வியாபாரம் செய்ய....பெரிய டயர்களை கூட அசால்டாக உருட்டிச் செல்வார்.

அங்கும் உழைப்பு, உழைப்பு...முதலாளிக்கு நல்ல லாபம் ஈட்டித்தந்தார்.

பின்னர் உடல் நலன் குன்றி, வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டிய‌ நிலையிலும், நம்பிக்கையால் வெற்றி கண்டவர்.

போன வருடம் விடுமுறை‍யில், அவர் வீட்டுக்கு சென்று பேசிய நிகழ்வு இன்னும் என் நெஞ்சில்...

அவர் மறையவில்லை...நம்பிக்கைகள் அழிவதில்லை.வடமலை , ஓர் மாமனிதன். அவர் என்றும் வாழ்வார்.

நட்புக் கூட்டம்‍-2018

Category :

30 வருடங்களுக்கு பிறகு  நண்பர்கள் சந்திப்பு நேற்று (30-12-2018) கடலூர்‍- ல்
நடந்தேறியது. சுமார் 22 கல்லூரி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

நான் பாலைவன தேசத்தில் பணிபுரிவதால் கலந்து கொள்ள இயலவில்லை.
மற்ற நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்தும் வந்திருந்தனர்.

நெகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் உரையாடல்கள்...இருக்காதா பின்னே, 30
வருடம் கொஞ்ச காலமல்ல...

சில மாதங்களுக்கு முன் தான் புதுப்பிக்கப்பட்ட உறவு அது, ஆனால் அதன்
வலிமை நேற்று தான் தெரிந்தது.

நட்பு " உறவினை" விட மீண்டும் புரிந்தது. நிறைய நண்பர்கள் டாக்டர், எஞ்சினியர்,அரசுப்பணி,தொழிலதிபர் என பலப்பல...

நண்பேன்டா....!!!

கடலூரின் 20,000 கோடி கனவு - நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேசன்?

Category : ,

நாகார்ஜுனா நிறுவனத்திலிருந்து நான் விலகி, இரண்டு மாதம் ஆகிவிட்டது. நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனத்தால் (Nagarjuna Oil Corporation Limited) கடலூர் மாறப்போகிறது, கடலூர் மக்கள் பயன் பெறப்போகிறார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. ஒரு அருமையான திட்டம் காலதாமதத்தினால்  ஏராளமானோர் நொந்து போய் உள்ளனர்.


கட்டுமானப்பணி, நிறுவனப் பணிகள், பாதியிலேயே நிற்பதினால் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. இதில் பணிபுரியும் பொறியாளர், மற்றும் நிர்வாக பணியாளர்கள் வெளியேறிய வன்னம் உள்ளனர்.


கடந்த 14 வருடங்களாக இதோ, அதோ வந்துவிடும், இன்னும் சில மாதங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில்  காலம் சென்று கொண்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சமே, இதன் அமைப்புத்தான், கடலோரத்தில் அனைத்து வசதிகளுடன் இருக்கும் ஒரு அருமையான நில வடிவமைப்பு.நெய்வேலிக்கு அடுத்தபடியாக அதிக
பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இது உருவாகலாம்.


இங்கு சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் டீசல், பெட்ரோல், சமையல் வாயு(LPG) சுற்றி உள்ள அனைத்து மக்களுக்கும் உடனடியாக கிடைக்க இயலும்.


இன்னும் காலம் கடந்தால் , நிறைய இழப்பு ஏற்படும்…..கடலூர் காத்துக் கொண்டிருக்கிறது.

படம் உதவி:கூகுள், www.nocl.co.in & www.hydrocarbons-technology.com


கடலூர் குலுங்கியது....நேற்று!

Category :

ஆமாம்.பாட்டாளி இளைஞர் சங்க மது எதிர்ப்பு மாவட்ட பேரணி,
மற்றும் மாநாட்டினால் கடலூர் நகரம் கல கலகலத்துப் போனது.

உண்மையிலேயே மருத்துவர் ராமதாசு அவர்களை பாராட்டியே தீர வேண்டும்,இந்த விடுதலைப் போராட்ட அழைப்பிற்கு.....அதாவது தமிழக இளைஞர்களை மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது....பேரணியை வெற்றியாக்கிய பெருமை ச.ம.உ வேல்முருகனை சேரும்.
மாநாட்டில் கலந்து கொண்டோர்....மருத்துவர் ராமதாசு,மத்திய அமைச்சர்அன்புமணி,மத்திய தொடர் வண்டி(ரயில்) இணையமைச்சர் வேலு,பா.ம.க தலைவர் மணி ஆகியோர்.

மாநாட்டில் நிச்சயமாக கலந்து கொண்டோர் 35,000-யை தாண்டும்.இது சுமார் இரவு ஒன்பது மணி நிலவரம்.மஞ்சை நகர் மைதானம் முழுவதிமே நிரம்பி இருந்தது.எங்கும் இளைஞர்கள்,இளைஞர்கள்...முக்கியமாக அந்த மைதானத்தில் ஒரு இடத்தில் கூட புகையை (சிகரெட்டு)காண இயலவில்லை.தண்ணீர் பாக்கட்டுகளை மட்டுமே காண முடிந்தது.இளைஞர்கள் ஒரு நாள் விரதம் இருந்தார்களா...இல்லை.....உண்மையான மாற்றமா எனத் தெரியவில்லை.

நேற்று மதியத்திற்கு மேல் போக்குவரத்து முற்றிலும்....தடை பட்டது...வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.போலிசார் இவ்வளவு கூட்டத்தை எதிர் பார்க்காததின் விளைவு.....

முக்கியமாக பாராட்டியே ஆக வேண்டிய மற்றுமொரு செயல்.....கடலூர் நகர டிஜிடல் பேனர்கள் சுமார் 2500 சிறிது,பெரிது என இருந்தவை இன்று காலையிலேயே அகற்றப் பட்டு இருந்தது.

கடைசி வரி:

பா.ம.க-வின் அரசியல் நிலையை விமரிசிக்கலாம்.....ஏனெனில் அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் அப்படி.பா.ம.க-வின் சில செயல்கள், கொள்கைகள் கேலிக் கூத்தாக கூட இருந்துள்ளன முன்பு....

ஆனால் இன்றய சமுதாய சீர்கேட்டை துடைக்க,வருங்கால தலைமுறையினரை, குறிப்பாக இளைஞர்களை மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்க.....ஒரு விடுதலை போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ள.....மருத்துவர் ராமதாசை பாராட்டியே ஆக வேண்டும்.

சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்!

Category :

பெயர்:சின்ன பொண்ணு
ஊர்:கடலூர்
உறவு:ஆயா(அம்மாவின் அம்மா)
வயது:80+
தற்போது:தனியார் மருத்துவமனையில்
காரணம்:சிக்-குன் -குனியா

சாதாரண காய்ச்சல் என்றுதான் ஆயாவை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்றார்,அம்மா.மருத்துவர் மருந்து,மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.
பின்னர் இரண்டு நாட்கள் மருந்து,சாப்பிட்டும் ஒன்னும் முன்னேற்றம் தெரியாததால்,மீண்டும் படையெடுத்தார்கள்,மருத்துவரை நோக்கி.,

இப்போது மருத்துவர் சொன்னது,சிக்குன் குனியா என்று.பத்து நாட்களுக்கு இப்படித்தான் சுரமும்,மூட்டு வலியும் இருக்கும் என்றார்.
ஆயாவினால் நிற்க கூட முடியாமல்,அம்மா மற்றும் என் துணைவி உதவி கொண்டு தான்,"ஒன்னுக்கும்,ரெண்டுக்கும்" போனார்கள்.

இரவில் ஒரே சத்தம்,பினாத்தல்,ஆயாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் கால்கள் ரொம்ப வீங்கிவிட்டன.மருத்துவரிடம் போனபோது,பெரிய
மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என கூறிவிட்டார்.

பின்னர் கடலூரில் புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து,இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன.இன்னமும் ஆயாவினால் பழய நிலைக்கு வர இயலவில்லை.

சுரம் விட்டு,விட்டு வருகிறது,அதனால் மருத்துமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்.அதிகாரம் செய்து கொண்டிருந்த ஆயா இப்போது அடங்கி ,ஒடுங்கிப் போய்.....

"ஆறு பேர் உள்ள வீட்டில்,ஆயாவை மட்டும் ஏன் கடித்தது அந்த கொசு?".யாராவது,மருத்துவ ஜீவிகள் பதில் சொல்வீர்களா?

கடைசி வரி:
சிக்-குன் -குனியா பற்றி
"Chikungunya fever is a viral disease transmitted to humans by the bite of infected mosquitoes. Chikungunya virus (CHIKV) is a member of the genus Alphavirus,in the family Togaviridae. CHIKV was first isolate
from the blood of a febrile
patient in Tanzania in 1953, and has since been identified repeatedly in west,central and southern Africa and many areas
of Asia, and has been cited as
the cause of numerous human epidemics
in those areas since that time.

The virus circulates throughout much of Africa, with transmission thought
to occur mainly between mosquitoes and monkeys."

இனிய நண்பன் செந்திலின் கடலூர் வருகை!

Category :

ஜுலை 08,2006 அன்று என் இனிய நண்பன் செந்தில் ,அவர் துணைவி அருணா மற்றும் இவர்களின் புதல்வி ராஜி மதியம் சுமார் 2.00 மணி அளவில் வந்திறங்கினர் வீட்டின் முன்.,
அளவில்லா மகிழ்ச்சி எங்களுக்கு;போன வருடமே வந்திருக்க வேண்டும்., தாமதமான வருகை எனினும் மிகுந்த மகிழ்ச்சி என் துணைவிக்கு.

எல்லோரும் சாப்பிட்டு கதை.,கதையாய் நிறைய விசயங்கள் பேசினோம்.,பின்பு இரண்டு மணி நேர ஒய்வுக்கு பிறகு கடலூர் கடற்கரைக்கு(பீச்) சென்றோம்.,
கடலில் காலை நனைத்துவிட்டு,ஒரு இடத்தில் அமர்ந்தோம்.
முகிலும்,ராஜியும் நன்கு ஒட்டிக் கொண்டனர்.,எங்களைச் சுற்றி,சுற்றி ஒடி அமர்க்களம் செய்தனர்.பின்பு மிளகாய் பஜ்ஜி,அய்ஸ்கிறீம்., என சாப்பிட்டு., குடும்ப நிகழ்வுகளை பேசினோம்.இடையில் அருணாவும்,எழிலும் பேசிக்கொண்டனர்.,யாரைப் பற்றி பேசப் போறாங்க???தெரிந்தது தானே!

எட்டு மணிக்கு ஆட்டோவில் நேராக கடலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆனந்த பவனுக்கு சாப்பிட இறங்கிக் கொண்டோம்.உள்ளே நல்ல கூட்டம்., அதனால் குளிர் அறைக்குச் சென்றோம்.,பிடித்தமானவற்றை உபசரிப்பாளரிடம் சொன்னோம்.,ராஜி யின் அழகுத் தமிழ் பேச்சு ,அனைவரையும் கவர்ந்தது.,பக்கத்தில் அமர்ந்து உண்டவர்களும் ரசித்தனர்.உணவும் அருமையாக இருந்தது.,

அங்கிருந்து ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.00.,விருந்தினர்
மாடியில் தூங்கினர்.,

காலையில் அப்பா ,கடலூர் ஒ.டி க்கு மீன்,இறால் வாங்க சென்றார்.,நான் 7.00மணி வாக்கில் நல்ல கோழி வாங்க வண்டிப்பாளையம் ரோட்டுக்கு சென்றேன்.,காலையிலேயே மதிய விருந்துக்கு எழிலும்,அம்மாவும் தயாராயினர்.காலை சிற்றுண்டி முடித்துவிட்டு கோயிலுக்கு கிளம்ப தயாரானோம்.நான் அப்பா ஏக்சல் -யை எடுத்து கொண்டேன்,செந்தில் என் வண்டி-"யமகா"வை(என் துணைவி மொழியில் "கட்டை வண்டி")உதைத்த பின் அவர் மனைவி மற்றும் ராஜி ஏறிக்கொண்டனர்.

நான் வழிகாட்டியாக முன்னே சென்றேன்.,முதலில் பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.,பின்பு திருவந்திபுரம் சென்று தேவநாத பெருமாளை பார்த்தோம்.,கோயிலை விட்டு வரும் போது மணி 12.00.,கொடுமையான வெயில்.,

நல்ல படியாக வீடு வந்து சேர்ந்தோம்.,வீட்டில் நுழைந்தவுடன் ஒரே வாசம்,அருணா ,எழிலுடன் சேர்ந்து சமையலில் இறங்கினார்.நாங்கள் போன வருடம் தஞ்சாவூர் சென்ற போது அறுசுவை விருந்து படைத்தவர் அருணா.

சரியாக இரண்டு மணியளவில் சாப்பிட்டோம்.,அருமையாக சமைத்திருந்தனர்.,(அம்மா,எழில் மற்றும் அருணா-வுக்கு நன்றி)சாப்பிட்டு சிறு தூக்கம் போட்டோம்.,
நான்கு மணிக்கு தஞ்சை செல்ல புறப்பட்டனர்., நானும்,முகிலும் பேருந்து நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தோம்.

ராஜி கையாட்டிக் கொண்டிருக்கும் போதே பேருந்து புறப்பட்டது.

இனிமையான இரண்டு நாட்கள்,இனிமையான மனிதர்களால் மனதில் இடம் பிடித்தது.

கடலூரின் அழுக்கு சில்வர் பீச்!

Category :

சில்வர் ( வெள்ளி)கடற்கரையில்!

விடுமுறையில் தங்கைகளின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு,தேவனாம்பட்டினம்
கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றோம்.நிறைய கூட்டம்.,அலை மோதியது.

இப்போதெல்லாம் சில்வர் (தமிழில் வெள்ளி)கடற்கரையில் நிறைய கடைகள்,அதிகமாக தின்பண்ட கடைகள்.மகளிர் சுய உதவி குழுக்களும்,மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்பினால் நிறைய கடைகள் வைத்துள்ளனர்.

கடலை கண்டவுடன் அனைத்து சிறுவர்களும் ஒடி காலை நனைத்தனர்,ஓட்டம்,ஆட்டம்
என பெரியவர்களுக்கு''டிமிக்கி''கொடுத்தனர்.மணலில் புரண்டனர்,நான் மிகவும் ரசித்தேன்,எவ்வளவு அழுக்காக்க முடியுமோ,அவ்வளவு ஆக்கினர் ஆடைகளை.

பின்னர் ஐஸ் க்ரிம் (தமிழாக்கினால் துப்புவார்கள்)சாப்பிட்டோம்.,திரும்பவும் விளையாட்டு.,சிறிது நேரம் கழிந்தது,அடம் பிடித்தனர்,சுண்டல் வேண்டுமென்று.,
பட்டானி சுண்டலை தேர்வுசெய்தனர்.இப்போது தான் தலைப்பை நினைவுக்கு
கொண்டுவரவேண்டும்.

சுண்டலை காலி செய்துவிட்டு காகிதத்தை தூக்கி எறிந்தனர்.,அம்மா,மனைவி,தங்கைகள் மற்றும் குழந்தைகள்...யாருமே சில அடி தொலைவில் குப்பை தொட்டிகளுடன் பிறந்த
குரங்கையோ,முயலையோ கண்டு கொள்ளவில்லை.நான், அவர்கள் போட்ட குப்பைகளை குரங்கிடம் போட்டேன்.,பின்னர் கடிந்தும் கொண்டேன்,நம்மூர் பீச்-ஐ நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால்,அசிங்கம் நமக்குத்தானே என்றேன்.,யாரும் காதில் கேட்டதாக தெரியவில்லை.

இப்படித்தான் அழகிய கடற்கரை அசிங்கமாக ஆகிறது.அடுத்த முறை தான் பார்க்கவேண்டும் என் குடும்பத்தினரை.,

ஆகவே என் இனிய கடலூர் உறவினர்களே,நாமும் கடலூரை ,கடற்கரை-யை சுத்தமாக்கி பாண்டிச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை கவரலாமே!இதனால் நம்
பொருளாதாரம்,சிறிதேனும் உயருமல்லவா!

வீட்டில்கூட இப்படிதான்,குப்பைகளை போட்டுவிட்டு பெறுக்குவது., எங்கள் வீட்டு பிளாஸ்டிக் குப்பைதொட்டி காத்து கொண்டிருக்கிறது என்று என் மேல் குப்பை விழுமென.?.

கடைசி வரி:(அட இலவசந்தாங்க)

  • சுத்தம் சோறு போடும்,
  • அசுத்தம் சேறு போடும்!

நான் என் கணினி-யில் கூட குப்பையை போடுவது இல்லை.அதுபோல் நீங்களும்
தமிழ்மணத்தில் குப்பையை போடாதீர்கள்.(மன்னியுங்கள் இந்த குப்பையை போட்டதற்கு)

மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப

Category :


உண்மையான மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப


நீண்ட வருடங்களுக்குப் பின் கடலூர் , உண்மையான மக்கள் பணியாளனை
திரு.ககன் தீப்சிங்பேடி மூலமாக பெற்றுள்ளது.

ஒரு மாவட்ட ஆட்சியர் எவ்வாறெல்லாம் மக்களுடன் பினைந்து பணியாற்றி அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவமுடியும் என்பதற்கு திரு.பேடி அவர்களே முன்மாதிரி;

கடலூர் மாவட்ட ஆட்சியரின் (கலெக்டர்) சாதனைகளில் சில,

  • சுனாமி பேரலை தாக்கியபொது,மனிதன் செய்த பணி இன்னும் பாதித்கப்பட்ட மக்கசொல்ல கேட்கலாம்.வெள்ளம் வந்து சாலைகள்(ரோடு) அறுத்துகொண்ட போது,ஜெ.சி.பி வாகனம் மூலம் சென்று மக்களை சந்தித்து குறையை சரி செய்தது.
  • கம்மியம்பேட்டை பாலம் அமைத்து ,புறவழிச் சாலை ஏற்படுத்திக் கொடுத்தது.
  • கடலூரின் பாழடைந்த பூங்காவை ,நந்தவனமாக்கி அதில் சிறுவர் பூங்காவை அமைத்து குழந்தைகளின் பாராட்டு மழையில் இப்போதும் நனைபவர்.
  • தேவணாம்பட்டினம் கடற்கரை (சில்வர் பீச்)-யை அழகு படுத்தி,அங்கே சுய உதவி குழுவினருக்கு சுயதொழிலையும் ஏற்படுத்தி கொடுத்தவர்.இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் மக்கள் கடலையும் பார்க்க வழி தந்தவர்.
  • முந்தைய ஆட்சியில் சிறந்த ஆட்சியர் என பரிசையும் பெற்றவர்,ஆட்சி மாறிய போது கூட இவரை மாற்றாமல் இருந்ததே,இவரின் சாதனைக்கு சான்று எனலாம்.
  • கடலூர் மாவட்டத்திற்கு இவர் வந்து மூன்றறை ஆண்டுகள் கழிந்தும் மக்களே கடன் என உழைப்பவர்.
  • 2006 நாட்காட்டி-யில் (காலண்டரில்) குடியரசு தலைவர் திரு.கலாமுக்கு போட்டியாக இடம் பெற்றவர்.நிறைய வணிக நிறுவனங்கள் திரு.பேடி- யின் புகைப்படத்தை தங்கள் நிறுவன நாட்காட்டியில் இட்டு பெருமை சேர்த்தனர்.
இவரின் சொந்த தகவல்கள்;

1.ஒரு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள்
2.அடிப்படையில் ஒரு இன்சினியர்-பாட்டியாலா தாபர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்
3.தமிழிலே பேச முயல்பவர்
4.இங்கு வருவதற்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆட்சியராக இருந்து பெரும் பரபரப்பாய் பேசப்பட்டவர்.மக்களின் பேரன்பையும்,பேராதரவையும் பெற்றவர்.

கடைசி வரி:(அட ....இலவசந்தாங்க!)

இவரிடம் இருந்து அரசாங்க ஊழியர்கள் நிறைய பாடம் படிக்கலாம்.(மனமிருந்தால்)