Showing posts with label புதுச்சேரி. Show all posts
Showing posts with label புதுச்சேரி. Show all posts

புதுச்சேரி = குடிச்சேரி‍‍: ஒரு "பார்"வை!

Category :

இன்று காலை ஆறரை மணிக்கு வில்லியனூர் சென்றபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டின.

1.மேட்டுப்பாளையம் சாராயக்கடை/கள்ளுக்கடை:

சுமார் நூறு பேர் உற்சாக பாணம் அருந்திக் கொண்டிருந்தனர்.
காலை தேநீர் கடையில் உள்ள கூட்டத்தை விட இங்கு அதிகம்
இருந்தனர்.முன்பு மாலையில் பணி முடிந்து போகும்போது
குடித்தவன் இன்று முன்னேறி அதிகாலையில் குடிக்கிறான்.
தமிழனின் தலையெழுத்தை இனி யாரும் மாற்றமுடியாது.
வெள்ளைக்காரன் எவ்வளவு குடித்தாலும் யாரையும் முகம்
சுளிக்க வைக்கமாட்டான்.ஆனால் தமிழன் முட்டக் குடித்து
சாக்கடையின் நாற்றத்தை தனதாக்கி கொண்டிருப்பது மனதை
சுடுகிறது.
2.அரும்பார்த்தபுரம் சாராயக்கடை/கள்ளுக்கடை:
இங்கு சுமார் அறுபது முதல் எழுபது பேர் வரை இருந்தனர்.
வியாபாரம் சூடு படிக்க ஆரம்பித்து இருந்தது.
புதுச்சேரியை ஆளும் காங்கிரசு கட்சி குடிச்சேரியாக்கி மக்களை
மேன்மைபடுத்தி இருப்பதை "மார்" தட்டிக் கொள்ளலாம்.

என்ன காரணம்:
ஏன் காலை ஆறு மணிக்கே சாராயக்கடையை மொய்க்கின்றனர்.ஏன் குடும்பம், மனைவி,
குழந்தை என இருந்தும் போதைக்கு அடிமையானது ஏன்?
விடை கிடைப்பது சுலபம்.....குடி கொடுக்கும் போதை தான் அது.
அடித்தட்டு மக்கள் சாராயக்கடை,கள்ளுக்கடைகளை மொய்க்க,
நடுத்தர,மேல் மட்ட மக்கள் சொகுசு வெளிநாட்டு சரக்குகளை
குடிக்கின்றனர்.

மீதி கடைகளை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன்,அது வரை
போதையுடன் காத்திருங்கள்.

அடேங்கப்பா,,,,பாண்டிச்சேரி-க்கு விமானம்!

Category :


புதுவை மக்கள்(பணம் படைத்தவர்கள்) இனி சென்னைக்கு தினமும்
விமானத்தில் பறக்கலாம்.விமான சேவையை நடத்த ஜாக்சன்(Jagson Airlines)
ஏர்லைன்ஸ் முன்வந்துள்ளது.கூடுதலாக பெங்களூருக்கும்,திருப்பதி-க்கும்
கூட பயணம் செய்யலாம்.

கடலூர்காரனான நான் எப்படி,பயணம் செய்யமுடியும்.?,கடலூருக்கு யாராவது
விமானம் விட்டால் நானும் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.கடலூரை முன்னேற விடாமல் தடுக்கும்,பாண்டிச்சேரியை நாம் எப்படி எதிர்கொள்வது?கடலூர் வலைப்பதிவர்களே,ஆலோசனை-யை அள்ளி விடுங்கள்.

ஜாக்சன் ஏர்லைன்ஸ்-புதுடில்லி-யை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.முக்கியமாக அவர்கள் இயக்க இருக்கும் விமானம்,"டோர்னியர்- 228'',(DORNIER 228)14முதல்16 பேர் வரை பயணம் செய்யலாம்,டோர்னியரை-தயாரிப்பது நம்ம பெங்களூர் எச்.ஏ.ல் (HAL)தான்.
விமானத்தின் மாதிரி படம் தான் மேலே உள்ளது,,


கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பாண்டிச்சேரி- சென்னை-ரூ.1500(பேருந்துக்கு,அதாங்க பஸ்-க்கு ரூ.46/தான்.)
பாண்டிச்சேரி-பெங்களூர்-ரூ.2400
பாண்டிச்சேரி-திருப்பதி-ரூ.2400

பாண்டிச்சேரி மக்களே மேலே பறந்து, பறந்து பாரை(!) பாருங்கள்,தண்ணீர் போடாமல்.,
பறந்து பார்த்துட்டு ஒரு பதிலும் போடுங்க.