Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

தேவையில்லா ஆணி-ஆளுநர்?

Category : ,

 தேவையில்லா ஆணி-ஆளுநர்?


ஆங்கில காலணியாதிக்கத்தின் மிச்சமே ஆளுநர் பதவிதற்போதைய காலகட்டத்தில் இப்பதவி தேவையில்லாத ஒன்றுமக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த ஆளுநர்கள்மக்களாட்சிக்கு எதிரானவர்களே.


அதுவும் தற்போது பல ஆளுநர்களின் செயல் அருவெறுக்கத்தக்கதாக உள்ளதுசிலர் அரசியல்வாதியாக செயல்படுவது கண்கூடு.


தமிழ் நாடு ஆளுநர் ஒரு படி மேலே போய் , சட்டமன்றம் இயற்றிய தீர்மானங்களை மிதிப்பதுமக்கள்மன்றத்தின் உரிமையை உதாசீனப்படுத்துவதுஜனநாயக விரோதநடவடிக்கையே தவிர வேறில்லைதமிழ் நாடு அரசு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் “ராஜ் பவன்” -ல் இன்னும் உறங்குகின்றன.


வெள்ளக்காரனின் ஆளுநர் பதவி நமக்கேன்இந்த ஆணி துருப்பிடித்த ஆணி. ஆளுநர் வசிக்க 156 ஏக்கர் கொண்ட மாளிகைத் தோட்டம் ஏன்?.


அசாதாரன சூழலில் மாநில அரசை நெறிபடுத்த உயர்நீதி மன்றங்கள் உள்ளன.குறிப்பாக ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்பதால் எந்தசட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்


மக்களாட்சி மணம் வீசட்டும்

சட்டமன்ற உரிமைகள் உரக்க கேட்கட்டும் !!

யானையை வீழ்த்திய பூனை!

Category : , ,

ம்ஆப்கானிஸ்தான் நாட்டில் அது தான் நடந்துள்ளது.  மறுபடியும் தலீபன்கள் ஆயுதத்தால் 

மக்கள் ஆட்சியை வீழ்த்தியுள்ளனர்.




3லட்சம் அரசு இராணுவத்தை 75,000 தலீபன்கள் எப்படி வீழ்த்தினர் அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி
தலைநகர் காபுல் வீழ்ந்தவுடன் மக்கள் ஓடிய அவலத்தை பார்த்த கண்கள் அழுவதை தடுக்க இயலவில்லை.ஜனநாயகம் வீழ்ந்தால் கூட பரவாயில்லைஅதை காக்க மக்களும் தயாரில்லை என்பதும் உண்மை.



இந்த ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும் தலைவலிதான்தீவிரவாதம் மறுபடியும் 

வேறுவிதமாக தலைதூக்கும்.
ஆக மக்கள் விரும்பினால் தான் மக்களாட்சிஇல்லையெனில் அடிமை வாழ்க்கை தான்.
ஆப்கன் பெண்கள் நிலைதான் இனி கேள்விக்குறி?


ஆப்கன் எதிர்காலமே கேள்விக்குறிதான்??
மக்கள் கிளர்ச்சி இன்றிஇனி மாற்றம் இல்லைஜனநாயகப் போராட்டம் இனி மக்கள்
விரும்பினால் தான்இல்லையெனில் அடிமை வாழ்க்கை தான்.??? 


Photo credits: Google

இனமான பேராசிரியர் மறைந்தார்!

Category : , ,

  • கடைமை
  • கண்ணியம்
  • கட்டுப்பாடு
தி.மு. வின் தூண் சரிந்துவிட்டது.
தமிழகத்தின் ஓர் அற்புதமான மனிதன்நல்ல பேச்சாளர்திறமையான நிர்வாகி இன்று இல்லை.

கட்சிக்கு உண்மையாக பணியாற்றியவர்மரியாதையுடன் பழகியவர்கலைஞரின் இதயமாகசெயல்பட்டவர்.

என் அபிமான பேச்சாளர்அவர் கடலூர் வரும்போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை தவறாமல்கேட்டு ரசித்தவன்.

இனமான பேராசிரியரின் பங்களிப்பை தமிழகம் என்றும் மறக்காது.

கலைஞரே போதும்?இன்னும் மவுனம் ஏன்??

Category :

போதும் கலைஞரே,போதும்....இனியும் தி.மு.க வை அழிக்காதீர்கள்.

தயவு செய்து கட்சிப் பணியிலிருந்து விலகி, அண்ணாவின் கட்சியை
காப்பாற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.
இனியும் உங்கள் "குடும்ப ஊழல்களுக்கு" கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.


இந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.
சுயமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.

கட்சியின் அடுத்த தலைவனை உடன்பிறப்பு தேர்ந்தெடுக்கட்டும்,
இதுதான் உண்மையான தி.மு.க தொண்டணின் விருப்பம்.அதனால்

தயவு செய்து அரசியலிலிருந்து விலகுங்கள்.

இனியும் "ஒருவர் சிறை சென்றுவிட்டதாலேயே குற்றவாளியாகிவிடமாட்டார்"
என நாக்கை சுழற்றாதீர்.

நாங்கள் பட்டது போதும்...கலைஞரே!!!!

கார்ட்டூன் உதவி: மதி
நன்றி:தினமணி

புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?

Category :

New Secretariat building for sale!

ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.


அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்
விற்பனைக்கு வர உள்ளது.

"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த
வாடகைக்கும் கிடைக்கும்.

கடைசி வெறி:
மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.

வைகோ நடைப்பயணம்?

Category :

வைகோ அவர்களே உங்களின் பணி இனிமேல்
தான் தமிழகத்துக்கு தேவை.


ஒரு அண்ணா கசாரே(Anna Hazare) தலைநகரை கலக்கி பொது
வாழ்வில் வெற்றி பெரும் போது,உங்களால் ஏன் முடியாது?

ஆரம்பியுங்கள் உங்களின் நடைப்பயணத்தை."சேது சமுத்திர திட்டம்"
நிறைவேற வாருங்கள் வீதிக்கு.

தமிழனுக்கு உங்களை விட்டால் வேறு "தலைவன்" இல்லை.மக்கள் காத்திருக்கிறோம்......வாருங்கள் வைகோ அவர்களே!
வாருங்கள்!!

படம் உதவி:சங்கொலி இதழ்

தினத்தந்தி-யில் புரியாத (இந்தி) விளம்பரம்?

Category :

இன்றைய தினத்தந்தியில் ஒரு இந்தி மொழி விளம்பரம் வந்திருக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வெளியிட்டது இந்திய தொடர்வண்டித் துறை
(ரயில்வேத் துறை) எனத் தோன்றுகிறது.

ஒவ்வொருவரும் ஒரு அடையாள அட்டையை தூக்கிப்பிடித்துக்
கொண்டு காட்சி தருகின்றனர்.இதில் கடவுச் சீட்டு,ஓட்டுனர் உரிமச்சீட்டு,
வாக்காளர் அடையாள அட்டை என அடங்குகிறது.

இது யாருக்கான விளம்பரம் எனத் தெரியவில்லை.தமிழக மக்களின்
மொழி தமிழ்தான்; இந்தியில் வெளியிட்டால் யாருக்குப் புரியப் போகிறது.?
ஏன் இந்த பொது விளம்பரத்தை ஆங்கிலம்,தமிழ் போன்ற புரியக் கூடிய
மொழியில் வெளியிடப்படவில்லை?

காசுக்காக ஏன் தினத்தந்தி புரியாத மொழியில் வெளியிட வேண்டும்.இந்த
விளம்பரம் பற்றி தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கு தெரியுமா?"தமிழ் வெல்க" என்ற அடைமொழியை வைத்து வியாபாரம் செய்யும் தினத்தந்திக்கு இது சரியா?

இந்திய ரயில்வே துறையின் இந்த எதேச்சிகாரத்திற்கு குரல் கொடுங்கள்
தமிழர்களே? இந்தியில் விளம்பரம் செய்யும் போது உடன் மக்களுக்குப்
புரியும் மொழியிலும் இடச் சொல்லுங்கள்.

இது இந்திய தேசம், "இந்திதேசம்" அல்ல!

புரட்சியாளனான ஒரு வலைப்பதிவர்?

Category :

இப்போது நடந்துவரும் எகிப்து மக்களின்
எழுச்சியின் ஒரு பங்கில், ஒரு வலைப்பதிவரும் உண்டு.


எதேச்சிகார அரசை வீழ்த்த வீறுகொண்ட ஒரு இளைஞன்
தான் கானிம்(Wael Ghoneim), கூகுள்(Google Inc, Dubai) நிறுவனத்தின்
துபாய்(Dubai) பகுதி மேலாளர்.போராட துபாயிலிருந்து, கெய்ரோ(Cairo) போனவன்.

வாங்கும் சம்பளத்தில் சொகுசு வாழ்க்கைக்கு மட்டும் ஆசைப்படாமல்
தன் மக்களின் எழுச்சிக்கும் பாடுபடத் துணிந்த ஒரு மாவீரன்.
ஒரு வாரம் எகிப்து சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமை இயக்க
போராளிகளினால் விடுவிக்கப்பட்டவர்.

கானிம் , நீ ஒரு உண்மைப் போராளிடா.உன்னைப் போற்றுகிறோம்,
ஒரு வலைப்பதிவனாய் பெருமிதம் கொள்கிறோம்.

நன்றி:அல்மசுரிஅல்யும்.காம்
தகவல் மூலம்:www.almasryalyoum.com

யார் தான் குற்றவாளி- தி.மு.க-வின் புதுமொழி?

Category :

கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
ஊழல் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்,

கொலை செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
திருட்டு செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

பொய் சொன்னதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
வன்புணர்வு (கற்பழிப்பு) செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

விபச்சாரம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
குற்றம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

அப்ப யார் தான் குற்றவாளி?
கேள்வி கேக்குற மக்கள் தான்?

படம் உதவி:டூன்பூல்.காம்,பதிவர் சதிசு,கூகுள் படம்

கடிதம் கலைஞருக்கு எழுதியது!

Category :

உங்கள் பொய்களைச்
சுமந்து செல்ல முடியவில்லை ;


கடிதம் போடுகிறீர்,போய்ச் சேருமிடமோ
புதுடில்லி குப்பைத் தொட்டி.

தயவுசெய்து அடுத்தக் கடிதத்தை
"சிங்களவனுக்கு" அனுப்புங்கள்,
பொய்யுடன் பொசுங்கிப் போகிறேன்?

கலைஞர்,கலைஞருக்கு எழுதிய கடிதம்!

Category :

அனுப்புநர்:
மு.கருணாநிதி
எண்:15, 4வ‌து வீதி
கோபாலபுரம்,
சென்னை‍ 600086.

பெறுந‌ர்:
மாண்புமிகு முத‌ல‌மைச்ச‌ர் அவ‌ர்க‌ள்
த‌லைமைச் செய‌ல‌க‌ம்
த‌மிழ்நாடு அர‌சு,
சென்னை 600 009.

பொருள்:சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெய‌ர் சூட்டுவ‌து‍ தொட‌ர்பாக‌‍

அய்யா,

வ‌ண‌க்க‌ம்.நான் க‌ட‌ந்த‌ நான்க‌ரை ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌க‌த்தை "ந‌ல்லாட்சி" செய்து வ‌ருவ‌து அனைவ‌ரும் அறிந்த‌தே.ந‌ல்லாட்சிக்காக‌ மாத‌ம் ஒரு பாராட்டு
விழா ந‌டைபெறுவதையும் தாங்க‌ள் அறிவீர்.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வினால் "க‌லைஞ‌ர் காப்பீட்டுத் திட்ட‌ம்",
“க‌லைஞ‌ர் வீட்டு வ‌ச‌தி திட்ட‌ம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்ட‌ம்”,என‌ப் ப‌ல‌
திட்ட‌ங்க‌ள் க‌லைஞ‌ரின் "பெண்சிங்க‌ம்" மாதிரி வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக் கொண்டிருப்ப‌தையும் தாங்க‌ள் அறிவீர்.

இந்த‌ நிலையில் "காங்கிர‌சு" க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளையின் த‌ம்பி இள‌ங்கோவ‌ன்
சென்னை அர‌சு பொது ம‌ருத்துவ‌மனைக்கு "ராஜிவ்காந்தி" பெய‌ரை வைக்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரிய‌ர் வீர‌ம‌ணி, "பெரியார்" பெய‌ரை வைக்க‌
வேண்டுகோள் விடுத்துள்ளார்.க‌டைசியாக‌ "நாம் த‌மிழ‌ர்" என்ற‌ சிறார்
இய‌க்க‌ம் "முத்துக்குமார்"பெய‌ரை வைக்க‌வேண்டும் என‌க் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

ஆனால் இதில் அதிக‌ த‌குதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு ந‌ட‌த்திய‌தில் "க‌லைஞ‌ர்" பெய‌ரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ள‌ன‌ர்.இந்த‌ பெய‌ர் வைப்ப‌தில் உங்க‌ளுக்கும் ஆட்சேப‌னை இருக்காது என‌ ந‌ம்புகின்றோம்.


"க‌லைஞ‌ர் அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னை" என‌ பெய‌ரிட‌
இந்திய தேச‌த்தின் த‌லைவி, சோனியா காந்தி அம்மையாரிட‌மும் "கடிதம்" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டு உள்ளேன்.

ந‌ன்றி!

த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,

மு.க‌ருணாநிதி
த‌லைவ‌ர்,தி.மு.க‌
23-08-2010


நகல்:

1.மாண்புமிகு ஆளுநர் அவர்கள்
தமிழ்நாடு அரசு

2.மாண்புமிகு பிரதமர் அவர்கள்
இந்திய அரசு

கொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி?

Category :

கலைஞரை மகிழ்விக்க மீண்டும் ஒரு விழா நடைபெற இருப்பதாக‌
அறிய முடிகிறது.இந்திய அரசின் தபால் துறையே(அஞ்சல்) "கடித கவி"என்ற சிரிப்பு விருதை வழங்க இருக்கிறது.

இந்திய தபால் துறை நட்டத்தில் இயங்கும் இந்த காலகட்டத்தில்,தமிழக‌
முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து எழுதும் கடிதங்களினால் தான்
தாக்கு பிடிப்பதாக் கூறுகிறார்கள். கலைஞர் அனுப்பும் மனுக்கள்,கடிதங்களுக்கு
மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரிந்தும்,விடாப்பிடியாக‌
எழுதுவது ஒரு கலையாகவே கொண்டுள்ளார்.

தமிழினம்,தமிழக உரிமை எனும் போது கடிதம் எழுதும் கலைஞர்,தன்
குடும்பத்துக்கு பதவி வாங்க சக்கர நாற்காலியில் டில்லிக்கு ப‌டையெடுப்ப‌து
அனைவ‌ரும் அறிந்த‌தே....!

ஆகவே அனைத்து தமிழர்களும் ஒரு கடுதாசி மூலம் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.முத‌லில் வ‌ரும் 100 க‌டித‌ங்க‌ளுக்கு "க‌லைஞ‌ரின் பெண் சிங்க‌ம்"காட்ட‌ப்ப‌டும்.

கவிஞர் கனிமொழிக்கு ஒரு கடுதாசி?

Category :



சகோதரிக்கு முதல்ல வணக்கம்.

உங்களின் கவிதைகளையும், பெண்ணிய உரிமைக்கான‌
உரைகளையும் வாசித்திருக்கிறேன்,கேட்டிருக்கிறேன்.உங்களின்
எளிமையை கண்டு வியந்தும் இருக்கிறேன்.

ஆனால் இப்போது.....விசயத்துக்கு வருகிறேன்.இப்போதெல்லாம்
நீங்கள் கண்னை மூடிக்கொண்டு உலகைப் பார்க்கிறீர்கள்
எனத் தோன்றுகிறது.இன்னுமா சகோதரி..மௌனம்...ஏன்...ஏன்?

செத்து மடியும் அப்பாவி பெண்கள், குழந்தைகள்,கர்ப்பிணிகள்
உங்களின் மனதை உலுக்கவில்லையா...?தமிழன் என்பதால்
வேண்டாம்....ஒரு மனிதாபத்துடன் கூட பார்க்க ஏன் இயலவில்லை.
ஈழத்தமிழன் என்ன பாவம் செய்தான்....தன் உரிமையைப் பெற
போராடுவதை தவிர?உங்கள் தந்தை இந்திய இறையாண்மையை
இன்னமும் இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளார்.நமக்கு தார்மீக கடமையும்,
பொறுப்பும் உண்டு...ஏனெனில் ஒரு பெரும் தமிழினத்தின்
ஏழு கோடி தமிழனின் தலைவனாக,அதிகாரத்தில் இருக்கும் உங்களின்
தந்தை, ஏன் எதுவும் செய்ய மறுக்கிறார்.(அறிக்கை விடுவதை தவிர)

உலக இணையப் பக்கங்களை புரட்டும் போது...உங்கள் தந்தை பெறப்
போகும் பட்டங்கள் தான் பளிச்சிடுகின்றன...மாதிரிக்கு சில...கீழே;
1.கலைஞர் ஒரு "கொலைஞர்"
2.தமிழின துரோகி

இவைகள் உங்கள் மனதை காயப்படுத்தும்.ஆனால் தினந்தோறும்
செத்துமடியும் தமிழ்ப் பிணங்கள் முன்...இது ஒன்றும் இல்லை.

தயவு செய்து உங்கள் தந்தையுடன் பேசுங்கள்...செத்துக்
கொண்டிருப்பது தமிழினம் என ஞாபகப் படுத்துங்கள்.தேர்தல்
வந்ததால்...ஓட்டு ...ஓட்டு என எல்லோரும் ஒடிப்போவீர்கள்....?

தயவு செய்து பேசுங்கள்....மனிதத்துடன்!
இல்லையேல் வரலாறு மன்னிக்காது.


நன்றி: யாழ்.காம் (படத்திற்கு)

இறை"ஆண்மை" க்கு மருந்து?

Category :



இழந்த இறை ஆண்மையை மீண்டும் பெற:


விளம்பரம்:
150 வருட பாரம்பரிய குடும்ப மருத்துவர்களால் தயாரிக்கப்படும் இந்த மருந்தில் அரிய வகை மூலிகைகள் கலந்துள்ளதால் வீரியம் அதிகமாக இருக்கும்.இதற்கு பக்க விளைவும் கம்மி.


இது சிட்டு குருவி லேகியமோ,தங்க பஸ்மமோ கிடையாது...அதையும் தாண்டி புனிதமானது,....புனிதாமானது.!


இப்போது இந்த ஆண்மை மருந்திற்கு நல்ல கிராக்கி,பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது...குறிப்பாக அண்டை நாடுகளில்...

இந்த இறை "ஆண்மை" மருந்தின் பலன்கள்:


1.இது ராணுவ வீரர்களை "வெறியர்களாக்கும்".
2.துப்பாக்கி வீரியம் கொண்டு எழுந்து வெகு தூரம் பாயும்.
3.அப்பாவி பெண்களை, வல்லுறவு கொண்டு கொலை செய்யத் தூண்டும்.
4.இன அழிப்புக்கு மிகவும் ஏற்றது...குறிப்பாக பக்க விளைவு இல்லை.

எச்சரிக்கை:
1.இம் மருந்து போலி மருத்துவர்களாலும், போலி கலைஞர்களினாலும் விற்கப்படுவதால்......கவனம் தேவை.


2.இடைத்தரகர்களுக்கு தகுந்த "போபர்ஸ்" அளிக்கப்படும்.

கலைஞர்- ஒரு தமிழினக் கொலைஞர்!

Category :

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக் குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் -
உனை எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! -
எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்வெட்டிப் பழமொழிக்கு
சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களைஉன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா?
இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!அடிவயிறு எரிகின்ற அன்னையரின்
வெப்பம் உனைஅப்படியே பொசுக்கட்டும்!

ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் -
இதுசத்தியம்! சத்தியம்! சத்தியம்!


-திவாகரன்,தம்பிரான் தோழர்-

கடைசி வரி:
இக் கவிதை தமிழொசை.காம் இணயத்தில் இருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.
நன்றி:திவாகரன்,தம்பிரான் தோழர் & www.tamiloosai.com

சில வரிகள், வலிக்கும் என்ன செய்ய...உண்மையை சொல்ல வேண்டியுள்ளதே?

மம்தாவிடம் மண்டியிட்ட காங்கிரசு!

Category :

காங்கிரசு ஒரு தேசிய கட்சி....ஆனால் மேற்குவங்கத்தில் ஒரு உதிரி கட்சியாகத் தான் மதிக்கப்படுகிறது.இல்லை, மிதிக்கப்படுகிறது...
தேர்தல் கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரசுடன் பிச்சை எடுத்து 14 தொகுதிகளை பெற்றுள்ளது.

உத்திரபிரதேசத்தில் இன்னும் கேவலம்...6 தொகுதிக்கு மேல் உங்களுக்கு அருகதை இல்லை எனக் கூறிவிட்டனர் முலாயமின் சமாஜ்வாடி கட்சி.(மொத்த தொகுதிகள் 80)இதில் கொடுமை என்னவென்றால் ஒரு காலத்தில் காங்கிரசு செல்வாக்காக இருந்த மாநிலம்,இன்று செல்லாக் காசாக முன்னேறி உள்ளது.

காரணம் காந்தி,நேரு பேரை சொல்லி அரசியல் வியாபாரம் செய்ததினால்.

தமிழகத்தில் இவர்களுக்கு இருக்கும் "பெரும் ஆதரவு" அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் திமுக விடம் 20 தொகுதிக்கு பேரம் பேசுகின்றனராம்.இவர்களின் தகுதி இவர்களுக்கே தெரியாமல்....

உறவுகளே , காங்கிரசு கட்சிக்கு இது தான் கடைசி தேர்தலாக இருக்கட்டும்.இவர்களின் தமிழின விரோதத்துக்கு "வாக்குச்சீட்டால் வாய்க்கரிசி போட்டு" காங்கிரசை காணாமல் செய்வோம்.
அதுதான் தமிழனுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது.

சிதம்பரம் வாங்கிய அவமானம்?

Category :

கடந்த ஒரு வாரமாக சட்டம், ஒழுங்கு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் விசயமாக கர்நாடக முதல்வருடன் பேச்சுநடத்த முடியாமல் "மூக்குடைபட்டு" காத்துக் கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

மூன்று முறை தேதி குறித்தும், எனக்கு சொந்த தொகுதியில் மக்கள் பணி இருப்பதால் " நேரம்" இல்லை என்று சொல்லி சிதம்பரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.

சிதம்பரத்தின் "கை" கொஞ்சம் நீளம் தான்....மாநில முதல்வர்கள் இவரிடம் கையேந்தும் கூலிகள் என நினைத்து விட்டார் போலும்.
சட்டம்,ஒழுங்கு மாநில முதல்வரில் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால் சிதம்பரம் போன்றவர்கள் சோனியாவின் விசுவாசத்திற்காக எதையும் செய்வார்கள்.

அதுதான் மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை கூறி கடிதம் எழுதுவது.இது மாதிரி மாநில பிரச்சினையில் அதிகமாக மூக்கை நுழைப்பவர்களை மாநில முதல்வர்கள் கண்டிக்க வேண்டும்.அப்போது தான் சொரணை வரும்.

கடைசி வெறி:


படிக்கும் போது தமிழனை அவமானப்படுத்தி விட்டார்களே என எண்ண வேண்டாம்."காங்கிரசு காரன்" எப்போது தமிழனாக இருந்திருக்கிறான்?.

கைப்புள்ள கருணாநிதி!

Category :

வர, வர கலைஞருக்கு பதவி வெறியில்,காங்கிரசையும், அதன் தலைவியையும் பாராட்டு பாடுவதை பார்த்து காங்கிரசுகாரனே சிரிக்கிறான்.தன் குடும்பம்,தன் சுக போக நாற்காலி ஆசைக்காக, தன் தமிழினத்தையே காட்டிகொடுத்த துரோகி என்ற பட்டம் வரலாறு கண்டிப்பாய் கொடுக்கும்.பிரணாப் முகர்ஜி சொல்வதை கேட்டு புளகாங்கிதம் அடைந்து அறிக்கை விடுவது, ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு அழகல்ல.என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே, பிதற்றுவது கேவலம்.

இந்த பிரணாப் முகர்ஜி, பதவி சுகத்திற்காக "ராகுல் காந்தி"யை பிரதமர் என்று அறிவித்து, தன் அரிப்பை போக்கி கொண்டவர்.தன் விசுவாசத்தை காட்டிக் கொண்டவர்.

லாகூரில் (பாகிஸ்தான்)நடந்த தாக்குதலில்,சிறு காயம் பட்ட இலங்கை அணி வீரர்களுக்கும்,இலங்கைக்கும், இந்தியா....ஒப்பாரி வைக்கிறது.இலங்கைக்கு,இந்தியா என்ன தான் முட்டு கொடுத்தாலும்,அவர்கள் நம்மை ஆதரிக்க போவதில்லை.இது தான் வரலாறு.

இதே இந்தியா, நேற்று இலங்கை அரசின் தீவிரவாத தாக்குதலில் 57 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் குழந்தைகள்.இருந்தும் கண்டுக்கவில்லை, கண்டிக்கவில்லை.இதுதான் நியாயமா, தர்மமா......?
அரசு பயங்கரவாதத்தை, இந்தியா ஆதரிக்கிறதா?.....தமிழன் என்ன அவ்வளவு கேவலமானவனா??....இந்த பாவத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு.


இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட, தேர்தலில் எதிரிக்கு கூட ஓட்டு போடுவோம்.தமிழின துரோகிகள்"கைப்புள்ள" கருணாநிதி-க்கும்,காங்கிரசு காரனுக்கும் பாடம் புகட்டுவோம்.

கடைசி வெறி:
கலைஞர் கருணாநிதியின் தமிழின துரோகத்துக்கும்,அவரின் தேசிய ஒருமைப்பாட்டு இறையான்மைக்கும் அவருக்கு "கைப்புள்ள கருணாநிதி" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.இனி அனைத்து பதிவர்களும், கைப்புள்ள பட்டத்தை பயன்படுத்த வேண்டுகிறோம்.

கடலூர் முழு அடைப்பு -‍ முழு வெற்றி.

Category :

சிங்கள இனவெறியாட்டத்தை தடுத்த‌
நிறுத்த வலியுறித்திடவும், இந்திய அரசு
போருக்கு உதவி செய்திடுவதை தடுத்து
நிறுத்திடவும் நடைபெற்ற கதவடைப்பு
போராட்டம், கடலூரில் வெற்றிகரமாக‌
நடந்தேறி உள்ளது.

கடலூர் -ன் அனைத்து கடைகள்,மூடப்பட்டு
இருந்தன.பேருந்து,ஆட்டோ(தானி),லாரிகள் எதுவும்
ஓடவில்லை.

இது தி.மு.கா (திராவிட முன்னேற்ற காங்கிரசு) ) -ன்
தமிழின துரோகத்துக்கு , மக்கள் கொடுத்த அடி
என்றே கூறலாம்.

அய்யயோ....கொல்றாங்களே-கலைஞர்!

Category :

இன்று முதல்வர் கலைஞர் ,முத்துக்குமார் விசயத்தை அரசியலாக்க வேண்டாம் என திருவாய் மொழிந்துள்ளார்.

கலைஞரை செயலலிதா அரசு, கைது செய்த போது சும்மாவே "அய்யோ....அய்யோ கொல்றங்க" - ன்னு பின்னனி பேசி அசிங்க அரசியல் செய்தவர் இந்த தலைவர் கருணா (நிதி).அதை நாள் முழுக்க "சன் டிவி"யில் காட்டி அரசியல் செய்தவர்.



இன்னும் கூட காசு சம்பாதிக்க " டி.வி" நடத்திக்கொண்டு,தமிழனை "கேபிள்" அகதியாக நடத்திக் கொண்டிருப்பவரே.....கட்சியை குடும்ப சொத்தாக்கியவரே.....பார்த்தும் கூட ரத்தக்கண்ணீருடன் கட்சி பணி செய்கின்றனர் உடன்பிறப்புகள்.



போதும் கலைஞரே...போதும்.நாற்காலிக்காக "தமிழினத்தையே அடகு வைக்காதீர்கள்."