என்ன ஆச்சரியமா இருக்கா....எனக்கும் அதே'''ங்''...
நம்ம சிவாஜி-ய தான் புடிக்க (படம் புடிக்க இல்ல) வந்துருக்காங்களாம்..
அதனால தான் நிமிட்ஸ்-ஐ சென்னை கடலில் நிறுத்திவிட்டு எல்லா போர்வீரர்களும் சுத்தி பார்க்க போயிருக்காங்க.அதுல ஒரு கூட்டம்
CIA ஐ சேர்ந்ததாம்.கடற்படை போர்வீரர்கள் நட்சத்திர ஓட்டல்களில் வீரத்தை காட்டிக்கொண்டிருக்கும் போது,இந்த
CIA குழு ஒவ்வொரு தியேட்டருக்கும் போய் சிவாஜிய தேடுதாம்.அவங்க வேட்டிய கட்டிகிட்டு, ஆட்டோவுல தான் போறாங்களாம்.
நேத்து ஒரு திரையரங்கு(தியேட்டர்) சென்ற போது,தியேட்டர்காரங்க இழுத்துகிட்டு போய் உள்ள உக்கார வச்சுட்டாங்களாம். தியேட்டருல அவ்ளோ கூட்டமாம்(????) ஏசி-ய கூட நிறுத்திட்டாங்கனா பார்த்துக்கோங்க...
லைட்கூட போடலயாம்.
CIA அதிகாரிங்க நைசா...பக்கத்துல இருந்தவங்ககிட்ட பேச்சு கொடுத்தாங்களாம்.அட தமிங்கிலிஷ்-ல தான்.ஆனா பக்கத்துல இருந்தவரு அமெரிக்க ஆங்கிலம் பேசியபோது திடுக்கிட்டாராம்.விசாரிச்சா அவரும் நிமிட்ஸ்-லேர்ந்து தான் வந்திருக்காரு,பக்கத்துல ஒரு பெண்புறா வுடன்.
சரி எப்படா இடைவேளை வரும்னு காத்திருந்தாங்களாம்.....யாராவது சிவாஜி ரசிகன் மாட்டமாட்டானா-ன்னு...இடைவேளை வுட்டும் லைட்டை போடலயாம்.CIA அதிகாரி ஒருத்தர் சிகரெட்டு லைட்டர கொளுத்துனா....அதிர்ச்சி....????இருந்தது ஒரு இருவது பேர்.
படம் வுட்டு யாராவது வெளிய வரும்போது,சிவாஜி பத்தி கேட்கலாம் வழியிலே காத்திருந்தா யாருமே வெளியே போவலையாம்.ஆச்சரியப்பட்டு அடுத்த ஷோவும் பாக்கபொறீங்களான்னு கேட்டாங்களாம் CIA. அதைக் கேட்டு,சார் நாங்களே நொந்து நூலாக இருக்கோம்,,,,போங்க சார்ன்னு தமிங்கிலத்துல சொன்னாங்களாம்.நாங்க எல்லாம் ஆஸ்ரமத்துல வேலை செய்யரோம்...இப்ப எங்க வேலை நாளு பூரா இங்க தூங்கறது தான்.என்ன பன்றது சார்...தலை யெழுத்துன்னு வேலை செய்யறோம்.அதுல நல்ல ஆங்கிலம் பேசிய ஆஸ்ரம வேலைகாரர்....ஏன் சார்...எங்க சிவாஜிய பாக்கவா அமெரிக்காலேர்ந்து வந்தீங்க??...
நீங்க வேற....200 கோடிய அமெரிக்காலேர்ந்து சிவாஜி எடுத்துகினு வந்தாருல்ல...அந்த பணம் எங்க பணம்...அதை கண்டுபுடிக்கத்தான் வந்துருக்கோம்.அந்த பணத்த அவர் உழைச்சி சம்பாதிக்கல...அமெரிக்க ஹவாலாவுல ''தில்லுமுல்லு''-ல சம்பாதித்தது......
இதைக் கேட்ட ஆஸ்ரம ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஒரு ரசிகர் மட்டும்.....CIA கிட்ட சொன்னார்,
''நாங்க ஒரு தடவ ஏமாந்தா....நூறு தடவ ஏமாறாம வுட மாட்டோம்''.
இப்ப CIA அதிகாரிகள் உறைந்தனர்.
அதிருதில்ல......