மறக்கக் கூடாதவர்கள்:பாவாணர்

Category :

மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தமிழின் சிறப்பையும், தொண்மையையும்,மேன்மையையும் சிறப்புற பரப்பியவர் தேவநேய பாவாணர் அவர்கள்.

அய்யா அவர்களின் அகர முதலி தொகுப்பு என்றுமே அவரின் பெயர்
சொல்லும் அரும் படைப்பாகும்.அவரைப் போற்றும் நிகழ்வாகத் தான் சென்னை
அண்ணா சாலையில் " தேவநேய பாவாணர் அரசு பொது நூலகம்" அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர் சமுதாயம், பாவாணரையும் அவர் தமிழுக்கு ஆற்றிய
பணிகளையும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

மொழிஞாயிறு தேவநேயப்பாணர் பற்றி முழுமையான தகவல்களைக் கீழ்க்கண்ட
தளங்களில் காணலாம்;

http://www.devaneyam.org/
http://leaders.senthamil.org/devaneya_pavanar.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D


படம் உதவி:
கூகுள் படம்

#tnfisherman- 6605 எதிர்ப்பு தானா? த்தூ...

Category :

மறுபடியும் சூடு ,சொரணையற்ற இனம் "தமிழினம்" என்பதை
நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் மீனவன் செத்தும் நமக்கு உணர்வு வரவில்லையெனில்
நாம் பிணம் தான்;நடமாடும் பிணம்.

வீதிக்குத் தான் வர முடியவில்லை; இணையத்தில் கூடவா நம்மால் கூட முடியாது.


ஒரு வாரமாகியும் பெட்டிசன் ஆன்லைன் (www.petitiononline.com/TNfisher/petition.html மூலம் பதிவான எதிர்ப்பு வெறும் 6605 தான் ;#tnfisherman ட்வீட்டுகள்(Tweets) வெறும் 6000 சொச்சம் தான்.


தமிழகத்தில் சுமார் 20லட்சம் பேர் தினமும் இணையம் பயன்படுத்தியும் உணர்வு கொஞ்சம் கூட இல்லை.எகிப்தை பார்த்து பிரமிக்கிறோம்;ஒரு பெண் அனுப்பிய
செய்தி தான் அங்கு தீப்பொறியானது.

ஆனால் இங்கு சவத்தை அனுப்பியும், கோபம் வரவில்லையெனில் நாம் "மனிதர்களில்லை,மனிதர்களில்லை".


தரவு உதவி:
http://www.whatthetrend.com/, http://www.wthashtag.com/ ,
www.twitter.com/tnfishermen , http://www.petitiononline.com/

யார் தான் குற்றவாளி- தி.மு.க-வின் புதுமொழி?

Category :

கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
ஊழல் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்,

கொலை செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
திருட்டு செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

பொய் சொன்னதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
வன்புணர்வு (கற்பழிப்பு) செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

விபச்சாரம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
குற்றம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

அப்ப யார் தான் குற்றவாளி?
கேள்வி கேக்குற மக்கள் தான்?

படம் உதவி:டூன்பூல்.காம்,பதிவர் சதிசு,கூகுள் படம்

கடிதம் கலைஞருக்கு எழுதியது!

Category :

உங்கள் பொய்களைச்
சுமந்து செல்ல முடியவில்லை ;


கடிதம் போடுகிறீர்,போய்ச் சேருமிடமோ
புதுடில்லி குப்பைத் தொட்டி.

தயவுசெய்து அடுத்தக் கடிதத்தை
"சிங்களவனுக்கு" அனுப்புங்கள்,
பொய்யுடன் பொசுங்கிப் போகிறேன்?

பூக்கிறது புதிய நாடு-தென் சூடான்

Category :

உலகின் புதிய நாட்டை உருவாக்கி சாதனை படைத்த சூடானிய மக்கள் மிகுந்த
மகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


கடந்த 09-01-2011 முதல் 15-01-2011வரை நடந்த வாக்குப்பதிவில் 98%பேர் தனிநாட்டுக்கான வாக்கை செலுத்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் சூடானுக்கு ஒரு கண்ணீர்க் கதை உண்டு.எப்படி ஈழத்தமிழன்
பிரிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டானோ அவ்வாறு. ஆப்ரிக்காவின் பெரிய நாடு சூடான்.வடக்கில் முசுலிம் மதத்தினர் பெரும்பான்மையாகவும்
தெற்கில் கிருத்துவ மதத்தினரும் வாழ்கின்றனர்.


ஆங்கிலேயர் தன் வசதிக்காக தெற்கு, வடக்கு சூடானை இணைத்து ஆட்சி
புரிந்து விட்டு,போகும்போது வடக்கு சூடானிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து
விட்டு வெளியேறினர்.அப்போதே தென் சூடானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும்
ஆளுமை இன்மையால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.ஏனெனில் இரு சூடானுக்கும் மொழி,பண்பாடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டது.

அதன்பின் நடந்தது முப்பது வருட உள்நாட்டு யுத்தம்....லட்சக்கணக்கான மக்கள் பலிகடா ஆயினர்.

இங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்தில் சூடான் இருந்தது சுமார் 57 ஆண்டுகள்.400 மொழிகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையானோர் பேசுவது அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே.சூடான் விடுதலை பெற்றது 01- சனவரி 1956.

கடைசியாக 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான பேச்சுவார்தையின் முடிவாக
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த உடன்பாடு ஏற்பட்டது.ஐ.நா வின் சிறப்பு குழுவினரால் இந்த வாக்கெடுப்பு சனவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கடைசி வெற்றி அறிவிப்புக்காக காத்திருகின்றனர்.

தென் சூடானின் சுதந்திர அறிவிப்பு வெளியிடும் நாள் 14-பிப்ரவரி- 2011. அன்று
உலகின் புதிய நாடாக உலா வரப்போகிறது தென் சூடான்.

வாழ்த்துகள் தென் சூடான்.

நன்றி:கீற்று.காம்,எழுத்து:எண்ணத்துப்பூச்சி
படம் உதவி:AFP

அடையாளம் இழக்கும் தமிழன்?

Category :

தமிழர் திருநாள் “பொங்கல் விழா” தொலைக்காட்சி விழாவாக மாறிவிடுமோ எனக் கவலை கொள்ள வைக்கிறது.
தமிழனுக்கு தொடர்பில்லாத “தீபாவளி”யை தூக்கிவைத்து கொண்டாடும் தமிழன், தன் விழாவான பொங்கலை மறந்தது ஏன் என்று புரியவில்லை? தமிழன் தன் வரலாற்றை மறந்ததும் வேதனையான நிகழ்வாகும்.

இந்தி”யத்தினால் தமிழன் அடையாளம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ,அவர்களின் மொழி,பண்பாடு அழியாமல் காப்பதுதான் நாகரிக மனிதனின் செயல்.
தமிழன் வேறு இனத்திற்கும், மொழிக்கும் எதிரி அல்ல.ஆனால் தமிழன் சொரணை அற்றவன் என்று அடித்தளத்தினை அழிக்க முனைந்தால் அது இந்தியா போன்ற கூட்டாட்சி அரசுக்கு நல்லதல்ல.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கூட தன் உற்சாகத்தை இழந்து கொண்டுள்ளதை அனைவரும் அறிவர்.

இந்த வருடம் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்க கடலூர், புதுச்சேரி என அலைந்தும் ஒரு சில அட்டைகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதுவும் வாழ்த்து ஆங்கிலத்தில் தான் இருந்தது. பார்த்தவுடன் நொந்து போனேன்… தமிழன் தன் உறவுக்கு அனுப்பும் வாழ்த்தும் ஆங்கிலத்தில்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சாலையெங்கும் விற்ற வாழ்த்து அட்டைகள் இன்று மறைந்துவிட்டன. கணணி உலகத்தில் அனைத்தும் மின் வாழ்த்தாய் அமைந்துவிட்டது என்றாலும் , வாழ்த்து அட்டைக்கு எதுவும் ஈடாகாது,வீட்டினர் அனைவரும் பார்த்து மகிழ வாழ்த்து அட்டையால் மட்டுமே முடியும்.
இதில் கொடுமை என்னவென்றால் காதலர் தினத்துக்கு ஏராளமான கடைகளின் வாழ்த்து அட்டை விற்கப்படுகிறது.

தமிழன் இனியும் தூங்கிக்கொண்டும், தொலைக்காட்சிக்கும் அடிமையாக இருந்தால்…..வரலாறு சிரிக்கும் நம் இனத்தைப் பார்த்து.

நம் பக்கத்து (தண்ணீர் தராத ) மாநிலமான கேரளாவின் மலயாளத்தினர் எப்படி திரு”ஓணம்”பண்டிகையை கொண்டாடுகின்றனர் எனப் பார்த்து அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

மதம்,சமயம் கடந்து தன் இனத்தின் விழாவாக மலயாளிகள் ஓனம் கொண்டாடும் போது நாம் ஏன் விமரிசையாக பொங்கலைக் கொண்டாட கூடாது?

அடுத்த ஆண்டாவது அனைத்து தமிழர்களும்(மதம் கடந்து) தமிழர் திருநாளைச் சிறப்பாக கொண்டாட முயற்சிப்போம்.

எழுத்து:எண்ணத்துப்பூச்சி
நன்றி:தமிழ்ச்சரம்.காம்

சவுக்கு.நெட்-தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்?

Category :

ஆமாம், எத்தனை பேருக்கு தெரியும் தமிழ்நாட்டிலும் ஒரு விக்கிலீக்சு(Wikileaks) அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் கலங்க வைப்பதை, கலங்க வைத்துக் கொண்டிருப்பதை.

இந்த தளம் தமிழக மக்கள் உரிமைக் கழகம்(www.savukku.net) என்ற
போர்வையின் கீழ் இயங்குகிறது.நிறைய உண்மைகளை
வெளியிட்டு அதிகார வர்க்கத்தினரை கழிசல் புடுங்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இதன் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்து மிரட்டியும் பார்த்துவிட்டனர்.ஆனாலும் நாளுக்கு நாள் இதன் புலனாய்வு செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன.

விக்கிலீக்சு தனது கொள்கையில் மிகவும் நேர்மையான முறையில் செயல் படுகின்றனர்.குறிப்பாக பொய் செய்தியை ஊக்குவிப்பதே இல்லை.அனைவரும் தன்னார்வலர்கள்,காசுக்காக மனசாட்சியை விற்க்கும் சாதாரண ஊடகக்காரன் அல்ல.
அமெரிக்கா எத்தனையோ மாதம் முயற்சி செய்தும் இன்றுவரை அவர்களின் "செர்வர்களைக்"(Server)கூட அடையாளம் காண முடியவில்லை.அதன் நிறுவனர் ஒரு கணிணிப்புலி என்பதால் சங்கேத மொழியிலே உலக கணிணி செர்வர்களில் தகவல்கள் இருந்தும் அதனை காணமுடிவதில்லை.
இங்கே நம் சவுக்கு.நெட் உண்மையை புட்டு வைக்கத் தான் பாடுபடுகிறது என்ற போதிலும் அது தனி மனித தாக்குதலிலும் ஈடுபடுவதினால் அதன் நியாயம் தர்மம் சோதனைக்குள்ளாகிறது.இணையதளத்தின் தலைப்பில் உள்ள தமிழீழத்தின் தலைவர் பிரபாகரனின் படம் அவசியமில்லாதது.தமிழகத்தின் நிறைய இதழ்கள்,வார ஏடுகள் காசு பார்க்கத்தான் அந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இந்தமாதிரி மக்களுக்கான ஊடகங்கள் இருந்தால் தான் அரசியல் வாதிகள், காசுக்கும்,சொகுசுக்கும் மயங்கும் அதிகாரிககள் ஒழுங்காக நடக்க முயல்வார்கள்.

எந்த ஊடகத்தின் பணியும் சமுக அக்கறையுடன், மனித முன்னேற்றத்துக்கு
பாடுபடுவது தான்.ஆனால் பெரும்பான்மையான ஊடக முதலாளிகள் , வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களாகவும், தரகர்களாகவும் உள்ளதால் உண்மைகள் அனைத்தும் வருவதில்லை.