சவுக்கு.நெட்-தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்?

Category :

ஆமாம், எத்தனை பேருக்கு தெரியும் தமிழ்நாட்டிலும் ஒரு விக்கிலீக்சு(Wikileaks) அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் கலங்க வைப்பதை, கலங்க வைத்துக் கொண்டிருப்பதை.

இந்த தளம் தமிழக மக்கள் உரிமைக் கழகம்(www.savukku.net) என்ற
போர்வையின் கீழ் இயங்குகிறது.நிறைய உண்மைகளை
வெளியிட்டு அதிகார வர்க்கத்தினரை கழிசல் புடுங்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இதன் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்து மிரட்டியும் பார்த்துவிட்டனர்.ஆனாலும் நாளுக்கு நாள் இதன் புலனாய்வு செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன.

விக்கிலீக்சு தனது கொள்கையில் மிகவும் நேர்மையான முறையில் செயல் படுகின்றனர்.குறிப்பாக பொய் செய்தியை ஊக்குவிப்பதே இல்லை.அனைவரும் தன்னார்வலர்கள்,காசுக்காக மனசாட்சியை விற்க்கும் சாதாரண ஊடகக்காரன் அல்ல.
அமெரிக்கா எத்தனையோ மாதம் முயற்சி செய்தும் இன்றுவரை அவர்களின் "செர்வர்களைக்"(Server)கூட அடையாளம் காண முடியவில்லை.அதன் நிறுவனர் ஒரு கணிணிப்புலி என்பதால் சங்கேத மொழியிலே உலக கணிணி செர்வர்களில் தகவல்கள் இருந்தும் அதனை காணமுடிவதில்லை.
இங்கே நம் சவுக்கு.நெட் உண்மையை புட்டு வைக்கத் தான் பாடுபடுகிறது என்ற போதிலும் அது தனி மனித தாக்குதலிலும் ஈடுபடுவதினால் அதன் நியாயம் தர்மம் சோதனைக்குள்ளாகிறது.இணையதளத்தின் தலைப்பில் உள்ள தமிழீழத்தின் தலைவர் பிரபாகரனின் படம் அவசியமில்லாதது.தமிழகத்தின் நிறைய இதழ்கள்,வார ஏடுகள் காசு பார்க்கத்தான் அந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இந்தமாதிரி மக்களுக்கான ஊடகங்கள் இருந்தால் தான் அரசியல் வாதிகள், காசுக்கும்,சொகுசுக்கும் மயங்கும் அதிகாரிககள் ஒழுங்காக நடக்க முயல்வார்கள்.

எந்த ஊடகத்தின் பணியும் சமுக அக்கறையுடன், மனித முன்னேற்றத்துக்கு
பாடுபடுவது தான்.ஆனால் பெரும்பான்மையான ஊடக முதலாளிகள் , வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களாகவும், தரகர்களாகவும் உள்ளதால் உண்மைகள் அனைத்தும் வருவதில்லை.

தமிழ்-ஆங்கில ஊடக அக்கிரமங்கள்

Category :

சமீக காலமாக இந்திய ஊடங்களின் செயல் வரையறை மீறி காசு பார்ப்பதையே குறிக்கோள் என்பதையே தெளிவாக காண்பிக்கிறனர். இடைத்தரகர் நீரா ராடியா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உரையாடல்

இந்தி ஊடகங்களில் சினிமா மாதிரி போட்டுகாட்டினர்.

இதன் மூலம் அனைத்து ஊடகங்களின் உண்மையான முகம் வெளிச்சமானது.


என்.டி.டி.வி(NDTV) பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ்(Hindustan Times) ன் விர் சிங்வி போன்ற‌ அதிமேதாவி ஊடகவியளாலர்களின் அசிங்க பேரத்தை கேட்க முடிந்தது.அரசியல் கட்சிகளின் புரோக்கர் மாதிரி இவர்களும் செயல்பட்டது அம்பல‌மானது.

எல்லா தொலைக்காட்சி நிறுவ‌ங்க‌ளும் டி.ஆர்.பி(TRP) என‌ப்ப‌டும் மாயைக்கு எதையுமே செய்ய‌ காத்திருக்கிற‌ன‌.வியாபார‌ம் இல்லையென்றால் ந‌ம் வீட்டு ப‌டுக்கையறையில் கூட‌ அவ‌ர்க‌ள் நுழைய‌லாம்.

நம்ம ஊர் ஊடகங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.நித்தியானந்தா,ரஞ்சிதா ஊடல் வீடியோ மூலம் சன் தொலைக்காட்சியும்,நக்கீரன் இதழும் அசிங்கமான முறையில் காசு பார்த்தது நாம் அறிந்ததே.


பத்திரிகை தர்மம் என்று பெயருக்குத்தான் உள்ளது.நிறைய ஊடகங்கள் கட்ட பஞ்சாயத்து செய்தும்,அரசியல்வாதியுடன் உறவாடியும் காரியம்
சாதித்துக்கொள்கின்றன.
தற்போது கூட நடிகர் விஜயகுமார் குடும்ப பிரச்சினையில் உள்நுழைந்து ஏதாவது அசிங்கம் கிடைக்காதா என நாக்கை தொங்க போட்டுக் கொண்டு
காத்துக்கிடக்கின்றனர்.

கடைசியாக ஒரு கொடுமை நடந்தது.ஒரு அறக்கட்டளை விழாவுக்கு நிதி திரட்ட வந்த நடிகை யானா குப்தா(Yana Gupta) ஜட்டிபோடவில்லை என்பதை இந்தி தொலைகாட்சி,பத்திரிகை படமாக்கி அசிங்கப் படுத்திக் கொண்டனர்.ஏமாந்தால் ஜட்டியில் கூட கேமரா வைத்துவிடுவார்கள் இந்த‌ கேவலமான ஊடகங்கள்.அதுவும் இதை செய்தது டைம்ஸ் ஆப் இந்தியா(Times of India),மிட்டே(Mid-day) போன்ற பெரிய ஊடகங்கள்.

பத்திரிகை தர்மம் என்பது தற்போது கடுகளவும் இல்லை.மனித சமுதாயத்தின் நான்காவது தூண் எனப்படும் "ஊடகம்"மக்களுக்கான, மக்கள் மேம்பாட்டிற்க்காகத் தானே தவிர....காசு பார்க்க அல்ல.


ஒரு ஊடகவியளாளன் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை அமெரிக்க ஊடக அமைப்பு விளக்கியுள்ளதை கீழே காணலாம்.

• உண்மையை தேடுதல், த‌ருத‌ல்(Seek Truth and Report It)
• யாரையும் புண்படுத்தாமலிருத்தல்(Minimize Harm)
• தன்னிச்சையாய் பக்கசார்பற்று செய்தி அளித்தல்(Act Independently)
• சமுக பொறுப்புணர்வுடன் அடங்கி செயல்படல்(Be Accountable)

கடையாக விக்கிலீக்ஸ்(wikileaks) என்ற இணையத்தளம் இன்று உலகையே நடுங்கவைப்பதை அனைவரும் அறிவர்.ஆனால் அவர்கள் அசிங்கமான முறையில் எதையும் காசுக்காக வெளியிடவில்லை.


அரசாங்கங்களின் உண்மை முகத்தை கிழித்தெறியத் தான் அதன் நிறுவனர் ஜூலியன்(Julian Assange) பாடுபடுகிறார்.


வாழ்க பத்திரிகையியல்…!


எழுத்து:எண்ணத்துப்பூச்சி
வெளியீடு:பாண்டிச்சேரிபிளாக்.காம்
நன்றி:www.pondicherryblog.com

புதுச்சேரி = குடிச்சேரி‍‍: ஒரு "பார்"வை!

Category :

இன்று காலை ஆறரை மணிக்கு வில்லியனூர் சென்றபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டின.

1.மேட்டுப்பாளையம் சாராயக்கடை/கள்ளுக்கடை:

சுமார் நூறு பேர் உற்சாக பாணம் அருந்திக் கொண்டிருந்தனர்.
காலை தேநீர் கடையில் உள்ள கூட்டத்தை விட இங்கு அதிகம்
இருந்தனர்.முன்பு மாலையில் பணி முடிந்து போகும்போது
குடித்தவன் இன்று முன்னேறி அதிகாலையில் குடிக்கிறான்.
தமிழனின் தலையெழுத்தை இனி யாரும் மாற்றமுடியாது.
வெள்ளைக்காரன் எவ்வளவு குடித்தாலும் யாரையும் முகம்
சுளிக்க வைக்கமாட்டான்.ஆனால் தமிழன் முட்டக் குடித்து
சாக்கடையின் நாற்றத்தை தனதாக்கி கொண்டிருப்பது மனதை
சுடுகிறது.
2.அரும்பார்த்தபுரம் சாராயக்கடை/கள்ளுக்கடை:
இங்கு சுமார் அறுபது முதல் எழுபது பேர் வரை இருந்தனர்.
வியாபாரம் சூடு படிக்க ஆரம்பித்து இருந்தது.
புதுச்சேரியை ஆளும் காங்கிரசு கட்சி குடிச்சேரியாக்கி மக்களை
மேன்மைபடுத்தி இருப்பதை "மார்" தட்டிக் கொள்ளலாம்.

என்ன காரணம்:
ஏன் காலை ஆறு மணிக்கே சாராயக்கடையை மொய்க்கின்றனர்.ஏன் குடும்பம், மனைவி,
குழந்தை என இருந்தும் போதைக்கு அடிமையானது ஏன்?
விடை கிடைப்பது சுலபம்.....குடி கொடுக்கும் போதை தான் அது.
அடித்தட்டு மக்கள் சாராயக்கடை,கள்ளுக்கடைகளை மொய்க்க,
நடுத்தர,மேல் மட்ட மக்கள் சொகுசு வெளிநாட்டு சரக்குகளை
குடிக்கின்றனர்.

மீதி கடைகளை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன்,அது வரை
போதையுடன் காத்திருங்கள்.

ரூ.70,000 கோடியில் ஒரு ஊழ‌ல் "வெளயாட்டு"!

Category :

அடேங்கப்பா....என மலைக்க வேண்டாம்.நம்ம நாட்டில் தான் இந்த‌(Commonwealth Games)
“காமன்வெல்த் விளையாட்டு விழா” என்ற‌ கேலிக்கூத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இந்தியா‍வின் வளர்ச்சியை உலகுக்கு தெரிவிக்க‌ இது உதவும் என பலர் கூறலாம்.
ஆனால் இது போலியான கவுரவத்துக்காகத் தான் நடத்தப்பட்டது என்பதை
டில்லியில் குடிசைகளை அகற்றியதையும், பிச்சைகாரர்களையும் விரட்டியதன்
மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால்"இந்தியா"என்ற ஓட்டை வீட்டுக்கு இந்த ஒய்யாரம் தேவையா?
நம் நாட்டில் பட்டினியாலும்,அடிப்படை வச‌தி இல்லாமலும் குறிப்பாக‌
மின்சாரம் இல்லாமல் அவதிப் படும் போது இது தேவையா?இந்தியா
அதன் "சோசலிசம்"என்ற அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகுவதை
நிறைய பேர் மறந்து விடுகின்றனர்.பணம் இருக்கிறவன் தன் "அடையாளத்தை"திமிருடன் காண்பிக்கத் தான் இந்த மாதிரி "அநாவசிய" விளையாட்டு.

இந்த பணத்தில் இந்தியாவில் எத்தனையோ மருத்துவமனைகளும், குழந்தைகளுக்கான‌ அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் "பணம்" பார்க்க இந்தமாதிரி ஆடம்பர விழாக்களை நடத்துகின்றனர்.இது மக்கள் வரிபணத்தினால் நடத்தப்படுபவதால் நாம் கவலை கொள்ள வேண்டி உள்ளது. இந்தியாவில் இன்னும் 37% மக்கள் வறுமை கோட்டில் துன்ப‌த்தில் த‌விக்கும் போது இந்த‌ அதிகார‌ வ‌ர்க்க‌ம்,இந்த‌ மாதிரி வீண் விளையாட்டை ந‌ட‌த்துவ‌து கேவ‌ல‌ம்.
 
புதுடில்லிக்கு மட்டும் ரோடு, மற்ற வசதிகள் வந்தால் போதுமா?இந்த விளையாட்டு
அரங்கங்களின் கதி இனி என்ன ஆகும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை?.

தமிழ்நாட்டு அரசின் ஆண்டு செலவே "20,000கோடி" என்றால் இந்த விளையாட்டுக்கு
செலவழித்த ரூ70,000கோடியில் என்ன,என்னவோ செய்திருக்கலாம், ஆனால் ஊழலை
ஒளிவு மறைவின்றி செய்துள்ளனர்,விளையாட்டு குழுவினர்.இதில் காங்கிர‌சு க‌ட்சியின் சுரேஷ் க‌ல்மாதி(Suresh kalmadi,Indian Olympic Association & Chairman, Organizing committee, Commonwealth games Delhi 2010) யின் க‌தை அனைவ‌ருக்கும் தெரியும்.

இப்போது ஊழலை விசாரிக்க ஒரு கமிசனை மத்திய அரசு அமைத்துள்ளது.அதன் அறிக்கைவந்த பிறகு தான் தெரியும், எத்தனை ஆயிரம் கோடி, அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு போனது என்று?

இந்தியாவின் ஆண்டு செலவு ஒதுக்கீடே(2009+2010) சுமார் ரூ.10லட்சம் கோடியாகும்.
சீனாவை(China) பார்த்து நாம் அந்நாடு போல் செயல்படத் தேவையில்லை.சீனா 2008 ஒலிம்பிக்‍-க்கு செலவிட்ட தொகை சுமார் $40பில்லியர் டாலர்(US$40Billion).ஆனால் இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை.ஆனால் சீனா எல்லா மாநிலத்துக்கும் 'அடிப்படை விளையாட்டு"கட்டமைப்பை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையான வல்லரசு என்றால், நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைந்து இருப்பதே.சும்மா...விளையாட்டு காட்டுவதினால் அல்ல.!

Reference:

http://www.bbcworld.com/, www.skynews.com, www.cwgdelhi2010.org, www.indiabudget.nic.in
Courtesy: Cartoon,Dileep Hegde

பவானிக்கு பசிக்குதாம்?

Category :

மிழ்த்திரைப்பட  உலகின் அற்புதமான‌
படமான "உதிரிப்பூக்கள்" திரைப்படத்தில்
வரும் சாதாரண வசனம்....வார்த்தை.
ஆனால் திரையில் பார்க்கும் போது, நம்
கண்ணீர் கூட திரையை பார்ப்பதை தவிர்க்க முடியாது.

"எந்திரன்" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு,மீதி நேரத்தில் "உதிரிப்பூக்கள்" பார்த்தேன்.பல ஆண்டுகளுக்கு பிறகு
பார்க்க நேர்ந்தது.அம்மா என்ற அற்புதமான உருவம்
மறைந்தால், குழந்தைகள் படும் துயரை மிகச் சரியாக‌
இயக்குனர் மகேந்திரன் காண்பித்திருப்பார்.ஒரு கொடுமையான‌
மனிதனாக வலம் வரும் "விஜயனின்" நடிப்பு அற்புதமானது.

திரைநாயகி "அசுவினி" இயல்பாக நடித்திருப்பார், நோயாளியாகவும்
வாழ்ந்திருப்பார்.

அனைவரும் மறுபடியும் பார்க்க வேண்டிய படம்.குறிப்பாக "இளைய‌

தலைமுறையினர்" பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

படம் வெளியான ஆண்டு:1979
நடிகர்கள்: விஜயன்,அசுவினி,சரத்பாபு
இயக்கம்:மகேந்திரன்
இசை:இளையராஜா
ஒளிப்பதிவு:அசோக்குமார்





வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்?

Category :

தினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான "வாகா"(WAGAH) வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.

இந்த "கண்றாவியை, கேலிக்கூத்தை" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(U-TUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சார்பாக "எல்லைப் பாதுகாப்புப் படை"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ "ரேஞ்சர்ஸ்" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்).

இந்த மாதிரி உதை மரியாதைகளினால் "கால் மூட்டுகள்" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது.

ஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.

இந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு "கைக் குலுக்களுடன்" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது?.

நன்றி:கீற்று.காம் (கீற்று இணையம்) Photo Courtesy:npr.org

கலைஞர்,கலைஞருக்கு எழுதிய கடிதம்!

Category :

அனுப்புநர்:
மு.கருணாநிதி
எண்:15, 4வ‌து வீதி
கோபாலபுரம்,
சென்னை‍ 600086.

பெறுந‌ர்:
மாண்புமிகு முத‌ல‌மைச்ச‌ர் அவ‌ர்க‌ள்
த‌லைமைச் செய‌ல‌க‌ம்
த‌மிழ்நாடு அர‌சு,
சென்னை 600 009.

பொருள்:சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெய‌ர் சூட்டுவ‌து‍ தொட‌ர்பாக‌‍

அய்யா,

வ‌ண‌க்க‌ம்.நான் க‌ட‌ந்த‌ நான்க‌ரை ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌க‌த்தை "ந‌ல்லாட்சி" செய்து வ‌ருவ‌து அனைவ‌ரும் அறிந்த‌தே.ந‌ல்லாட்சிக்காக‌ மாத‌ம் ஒரு பாராட்டு
விழா ந‌டைபெறுவதையும் தாங்க‌ள் அறிவீர்.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வினால் "க‌லைஞ‌ர் காப்பீட்டுத் திட்ட‌ம்",
“க‌லைஞ‌ர் வீட்டு வ‌ச‌தி திட்ட‌ம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்ட‌ம்”,என‌ப் ப‌ல‌
திட்ட‌ங்க‌ள் க‌லைஞ‌ரின் "பெண்சிங்க‌ம்" மாதிரி வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக் கொண்டிருப்ப‌தையும் தாங்க‌ள் அறிவீர்.

இந்த‌ நிலையில் "காங்கிர‌சு" க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளையின் த‌ம்பி இள‌ங்கோவ‌ன்
சென்னை அர‌சு பொது ம‌ருத்துவ‌மனைக்கு "ராஜிவ்காந்தி" பெய‌ரை வைக்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரிய‌ர் வீர‌ம‌ணி, "பெரியார்" பெய‌ரை வைக்க‌
வேண்டுகோள் விடுத்துள்ளார்.க‌டைசியாக‌ "நாம் த‌மிழ‌ர்" என்ற‌ சிறார்
இய‌க்க‌ம் "முத்துக்குமார்"பெய‌ரை வைக்க‌வேண்டும் என‌க் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

ஆனால் இதில் அதிக‌ த‌குதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு ந‌ட‌த்திய‌தில் "க‌லைஞ‌ர்" பெய‌ரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ள‌ன‌ர்.இந்த‌ பெய‌ர் வைப்ப‌தில் உங்க‌ளுக்கும் ஆட்சேப‌னை இருக்காது என‌ ந‌ம்புகின்றோம்.


"க‌லைஞ‌ர் அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னை" என‌ பெய‌ரிட‌
இந்திய தேச‌த்தின் த‌லைவி, சோனியா காந்தி அம்மையாரிட‌மும் "கடிதம்" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டு உள்ளேன்.

ந‌ன்றி!

த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,

மு.க‌ருணாநிதி
த‌லைவ‌ர்,தி.மு.க‌
23-08-2010


நகல்:

1.மாண்புமிகு ஆளுநர் அவர்கள்
தமிழ்நாடு அரசு

2.மாண்புமிகு பிரதமர் அவர்கள்
இந்திய அரசு