ரூ.70,000 கோடியில் ஒரு ஊழ‌ல் "வெளயாட்டு"!

Category :

அடேங்கப்பா....என மலைக்க வேண்டாம்.நம்ம நாட்டில் தான் இந்த‌(Commonwealth Games)
“காமன்வெல்த் விளையாட்டு விழா” என்ற‌ கேலிக்கூத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இந்தியா‍வின் வளர்ச்சியை உலகுக்கு தெரிவிக்க‌ இது உதவும் என பலர் கூறலாம்.
ஆனால் இது போலியான கவுரவத்துக்காகத் தான் நடத்தப்பட்டது என்பதை
டில்லியில் குடிசைகளை அகற்றியதையும், பிச்சைகாரர்களையும் விரட்டியதன்
மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால்"இந்தியா"என்ற ஓட்டை வீட்டுக்கு இந்த ஒய்யாரம் தேவையா?
நம் நாட்டில் பட்டினியாலும்,அடிப்படை வச‌தி இல்லாமலும் குறிப்பாக‌
மின்சாரம் இல்லாமல் அவதிப் படும் போது இது தேவையா?இந்தியா
அதன் "சோசலிசம்"என்ற அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகுவதை
நிறைய பேர் மறந்து விடுகின்றனர்.பணம் இருக்கிறவன் தன் "அடையாளத்தை"திமிருடன் காண்பிக்கத் தான் இந்த மாதிரி "அநாவசிய" விளையாட்டு.

இந்த பணத்தில் இந்தியாவில் எத்தனையோ மருத்துவமனைகளும், குழந்தைகளுக்கான‌ அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் "பணம்" பார்க்க இந்தமாதிரி ஆடம்பர விழாக்களை நடத்துகின்றனர்.இது மக்கள் வரிபணத்தினால் நடத்தப்படுபவதால் நாம் கவலை கொள்ள வேண்டி உள்ளது. இந்தியாவில் இன்னும் 37% மக்கள் வறுமை கோட்டில் துன்ப‌த்தில் த‌விக்கும் போது இந்த‌ அதிகார‌ வ‌ர்க்க‌ம்,இந்த‌ மாதிரி வீண் விளையாட்டை ந‌ட‌த்துவ‌து கேவ‌ல‌ம்.
 
புதுடில்லிக்கு மட்டும் ரோடு, மற்ற வசதிகள் வந்தால் போதுமா?இந்த விளையாட்டு
அரங்கங்களின் கதி இனி என்ன ஆகும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை?.

தமிழ்நாட்டு அரசின் ஆண்டு செலவே "20,000கோடி" என்றால் இந்த விளையாட்டுக்கு
செலவழித்த ரூ70,000கோடியில் என்ன,என்னவோ செய்திருக்கலாம், ஆனால் ஊழலை
ஒளிவு மறைவின்றி செய்துள்ளனர்,விளையாட்டு குழுவினர்.இதில் காங்கிர‌சு க‌ட்சியின் சுரேஷ் க‌ல்மாதி(Suresh kalmadi,Indian Olympic Association & Chairman, Organizing committee, Commonwealth games Delhi 2010) யின் க‌தை அனைவ‌ருக்கும் தெரியும்.

இப்போது ஊழலை விசாரிக்க ஒரு கமிசனை மத்திய அரசு அமைத்துள்ளது.அதன் அறிக்கைவந்த பிறகு தான் தெரியும், எத்தனை ஆயிரம் கோடி, அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு போனது என்று?

இந்தியாவின் ஆண்டு செலவு ஒதுக்கீடே(2009+2010) சுமார் ரூ.10லட்சம் கோடியாகும்.
சீனாவை(China) பார்த்து நாம் அந்நாடு போல் செயல்படத் தேவையில்லை.சீனா 2008 ஒலிம்பிக்‍-க்கு செலவிட்ட தொகை சுமார் $40பில்லியர் டாலர்(US$40Billion).ஆனால் இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை.ஆனால் சீனா எல்லா மாநிலத்துக்கும் 'அடிப்படை விளையாட்டு"கட்டமைப்பை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையான வல்லரசு என்றால், நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைந்து இருப்பதே.சும்மா...விளையாட்டு காட்டுவதினால் அல்ல.!

Reference:

http://www.bbcworld.com/, www.skynews.com, www.cwgdelhi2010.org, www.indiabudget.nic.in
Courtesy: Cartoon,Dileep Hegde

பவானிக்கு பசிக்குதாம்?

Category :

மிழ்த்திரைப்பட  உலகின் அற்புதமான‌
படமான "உதிரிப்பூக்கள்" திரைப்படத்தில்
வரும் சாதாரண வசனம்....வார்த்தை.
ஆனால் திரையில் பார்க்கும் போது, நம்
கண்ணீர் கூட திரையை பார்ப்பதை தவிர்க்க முடியாது.

"எந்திரன்" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு,மீதி நேரத்தில் "உதிரிப்பூக்கள்" பார்த்தேன்.பல ஆண்டுகளுக்கு பிறகு
பார்க்க நேர்ந்தது.அம்மா என்ற அற்புதமான உருவம்
மறைந்தால், குழந்தைகள் படும் துயரை மிகச் சரியாக‌
இயக்குனர் மகேந்திரன் காண்பித்திருப்பார்.ஒரு கொடுமையான‌
மனிதனாக வலம் வரும் "விஜயனின்" நடிப்பு அற்புதமானது.

திரைநாயகி "அசுவினி" இயல்பாக நடித்திருப்பார், நோயாளியாகவும்
வாழ்ந்திருப்பார்.

அனைவரும் மறுபடியும் பார்க்க வேண்டிய படம்.குறிப்பாக "இளைய‌

தலைமுறையினர்" பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

படம் வெளியான ஆண்டு:1979
நடிகர்கள்: விஜயன்,அசுவினி,சரத்பாபு
இயக்கம்:மகேந்திரன்
இசை:இளையராஜா
ஒளிப்பதிவு:அசோக்குமார்





வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்?

Category :

தினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான "வாகா"(WAGAH) வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.

இந்த "கண்றாவியை, கேலிக்கூத்தை" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(U-TUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சார்பாக "எல்லைப் பாதுகாப்புப் படை"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ "ரேஞ்சர்ஸ்" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்).

இந்த மாதிரி உதை மரியாதைகளினால் "கால் மூட்டுகள்" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது.

ஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.

இந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு "கைக் குலுக்களுடன்" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது?.

நன்றி:கீற்று.காம் (கீற்று இணையம்) Photo Courtesy:npr.org

கலைஞர்,கலைஞருக்கு எழுதிய கடிதம்!

Category :

அனுப்புநர்:
மு.கருணாநிதி
எண்:15, 4வ‌து வீதி
கோபாலபுரம்,
சென்னை‍ 600086.

பெறுந‌ர்:
மாண்புமிகு முத‌ல‌மைச்ச‌ர் அவ‌ர்க‌ள்
த‌லைமைச் செய‌ல‌க‌ம்
த‌மிழ்நாடு அர‌சு,
சென்னை 600 009.

பொருள்:சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெய‌ர் சூட்டுவ‌து‍ தொட‌ர்பாக‌‍

அய்யா,

வ‌ண‌க்க‌ம்.நான் க‌ட‌ந்த‌ நான்க‌ரை ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌க‌த்தை "ந‌ல்லாட்சி" செய்து வ‌ருவ‌து அனைவ‌ரும் அறிந்த‌தே.ந‌ல்லாட்சிக்காக‌ மாத‌ம் ஒரு பாராட்டு
விழா ந‌டைபெறுவதையும் தாங்க‌ள் அறிவீர்.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வினால் "க‌லைஞ‌ர் காப்பீட்டுத் திட்ட‌ம்",
“க‌லைஞ‌ர் வீட்டு வ‌ச‌தி திட்ட‌ம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்ட‌ம்”,என‌ப் ப‌ல‌
திட்ட‌ங்க‌ள் க‌லைஞ‌ரின் "பெண்சிங்க‌ம்" மாதிரி வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக் கொண்டிருப்ப‌தையும் தாங்க‌ள் அறிவீர்.

இந்த‌ நிலையில் "காங்கிர‌சு" க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளையின் த‌ம்பி இள‌ங்கோவ‌ன்
சென்னை அர‌சு பொது ம‌ருத்துவ‌மனைக்கு "ராஜிவ்காந்தி" பெய‌ரை வைக்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரிய‌ர் வீர‌ம‌ணி, "பெரியார்" பெய‌ரை வைக்க‌
வேண்டுகோள் விடுத்துள்ளார்.க‌டைசியாக‌ "நாம் த‌மிழ‌ர்" என்ற‌ சிறார்
இய‌க்க‌ம் "முத்துக்குமார்"பெய‌ரை வைக்க‌வேண்டும் என‌க் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

ஆனால் இதில் அதிக‌ த‌குதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு ந‌ட‌த்திய‌தில் "க‌லைஞ‌ர்" பெய‌ரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ள‌ன‌ர்.இந்த‌ பெய‌ர் வைப்ப‌தில் உங்க‌ளுக்கும் ஆட்சேப‌னை இருக்காது என‌ ந‌ம்புகின்றோம்.


"க‌லைஞ‌ர் அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னை" என‌ பெய‌ரிட‌
இந்திய தேச‌த்தின் த‌லைவி, சோனியா காந்தி அம்மையாரிட‌மும் "கடிதம்" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டு உள்ளேன்.

ந‌ன்றி!

த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,

மு.க‌ருணாநிதி
த‌லைவ‌ர்,தி.மு.க‌
23-08-2010


நகல்:

1.மாண்புமிகு ஆளுநர் அவர்கள்
தமிழ்நாடு அரசு

2.மாண்புமிகு பிரதமர் அவர்கள்
இந்திய அரசு

"டாஸ்மாக்" தமிழன்?

Category :


தமிழ் பேச்சு
எங்கள் மூச்சு,
தமிழ் பேசு
தங்க காசு.
தமிழன் பேச்சு
தெளிந்தால் போச்சு!


கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்:
Tamil Nadu State Marketing Corporation Limited(TASMAC)டாஸ்மாக்-க்கு ஒரு நல்ல தமிழ் பெயர்
வையுங்கள்.தமிழன் சாகட்டும்,
தமிழ் வாழட்டும்!

செம்மொழி மானாட,மயிலாட!

Category :




தமிழுக்கு செம்மொழி அலங்காரம் வந்தாலும்,இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சி
அதிகார மொழியாக பரவலாக்கப்படவில்லை.இன்னும் நீதிமன்றத்தில் தமிழ்
தடுமாறிக்கூட நுழைய முடியவில்லை.முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால்
தமிழுக்கும்,தமிழனுக்கும் செய்திருக்கலாம்.ஆனால் அவர் குடும்ப பிரச்சினையில் தடுமாறியதால், தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.


தமிழுக்கு எந்த மொழியை விடவும், செம்மொழி தகுதி அதிகம் உண்டு,அதற்கு
நம் இலக்கியங்களும்,வரலாறுகளும் சாட்சி.ஆனால் தமிழ்நாட்டில் மொழியை
வைத்து அரசியல் நடப்பது புதிதன்று.

ஆனால் தற்போது தமிழ் பேசுபவன் நிலையைப் பாருங்கள்,ஒரு பேரழிவை
சந்தித்த ஈழத் தமிழினம் படும் அவலம் "நான் தமிழன்" என்று கூறவே
கேவலமாக உள்ள்து.

தமிழுக்கு மாநாடு நடத்தினால் தமிழனுக்கு பெருமையே.ஆனால் கோவையில்
என்ன நடக்கப்போகிறது என்று எழுதித் தெரிய வேண்டியதில்லை.அது கலைஞருக்கு ஒரு பாராட்டு விழாவாகத் தான் நடக்கப்போகிற‌து.

இந்த மாநாட்டினால் கோவை நகர், புது சாலைகளையும், தண்ணீர் வசதிகளையும் தற்காலிகமாக பெற்றுள்ளது.இதுதான் இந்த மாநாட்டினால்
பெற்ற பயனாக இருக்கும்.

"செம்மொழி கீதம்" எங்கும் எதிரொலிக்கின்றன.ஏதோ இரைச்சலுக்ககு நடுவே சில தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளனர்.கலைஞரின்
இந்த வரிகளுக்கு " நோபல் பரிசு" கொடுக்க சில "கைப்புள்ள உடன்பிற‌ப்புகள்"மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

வாழ்க தமிழ்மொழி! வெல்க தமிழினம்!!

குறிப்பு:

மாநாட்டில் "குஷ்பு" அக்கா",செம்மறித் தமிழர்கள் என்ற தலைப்பில்
பேசலாம்.ஏன் என்றால் "அவருக்கு கெமிஸ்ரி" நல்லா தெரியும்.

நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!

Category :




நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!இந்த கேள்விக்கு விடையை யாராவது அறிஞர் பெருமக்கள் தந்தால் நல்லது.தற்போது "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி"
ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

சூன் 2010 முதல், சூலை மாதம் 15ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு
எடுக்கப்பட உள்ளது.ஆனால் அரசாங்கம் இது பற்றி தெளிவான
விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

ஆனால் தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்
இனம்,இந்தியா என்றே அச்சடிக்கப்பட்டு உள்ளது.வேறு நாட்டவர் என்றால்
மட்டுமே, அடுத்த வரியில் எழுத வழி செய்துள்ளனர்.

ஆகையினால் நம் தேசிய இன அடையாளத்தை பதிவு செய்ய இயலாது
என்றே தோன்றுகிறது.

பெரியார் திராவிடர் கழகம் "திராவிடர்" என்று பதிய கேட்டுக்கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கம் மற்றும் பழ.நெடுமாறன் "தமிழர்" என்று பதிய‌
கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இது பற்றிய சட்ட முன் மாதிரியை, யாராவது விளக்கினால் நல்லது.

இந்தியன் என்று ஒரு இனம் இல்லை என்று மட்டும் உறுதியாக கூற முடிகிறது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது கேட்கப்படும் கேள்விகள்;
1.Name of person
2. Relationship to head
3.Father's name
4. Mother's name
5. Spouse's name
6. Sex
7. Date of birth
8. Marital status
9. Place of birth
10. Nationality as declared
11. Present address of usual residence
12. Duration of stay at present address
13. Permanent residential address
14. Occupation/ Activity
15. Educational qualification


Please read the following text which is given in National population register(NPR);

Q.11: NATIONALITY AS DECLARED*
Indian-1, Others write name of Country
5.21.1 Nationality for each of the enumerated person has to be
asked from the respondent and recorded. You may come
across cases where the nationality of the persons in the
same household would be different. Therefore, you must
probe this question for each individual carefully to get the
correct information. Please record the nationality of the
respondent as declared by her/him for each of the persons
being enumerated. Do not get into any argument with the
respondent regarding this [Figure. 5.31 and 5.32].


Please inform the respondent to give correct Nationality of each person in the household.
She/he can be penalised for giving any incorrect/false information.


*Note : It may be noted that nationality declared by respondent does not confer
any right to Indian Citizenship